தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் பாரதிராஜா. இவர் கடந்த மாதம் காலமானார். அவரது மறைவு தமிழ் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள நிலையில், அவருக்கு சமீபத்தில் நினைவேந்தல் நடந்தது. 

Continues below advertisement

சினிமா கனவை நிறைவேற்றியவர் பாரதிராஜா:

அதில் பல பிரபலங்களும் பங்கேற்று பேசினர். அப்போது, பிரபல நடிகை ராதா பங்கேற்று பேசியதாவது, சினிமாவை கனவு என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த கனவை நிறைவேற்றியவர் பாரதிராஜாதான். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது படப்பிடிப்பு தளத்தில் அவரிடம் கிட்ட சென்று பேசுவதற்கே பயமாக இருக்கும். அவர் கோபப்படுவார் என்பதற்காக கிடையாது. அவர் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும்போது ஒரு துர்காதேவி மாதிரி இருப்பார்.

ஹீரோ, ஹீரோயின், உடன் இருக்கும் நடிகர்கள் அனைவருக்கும் நடிப்புச் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருப்பார். அதுமட்டுமின்றி, அந்த சூழலுக்கு ஏற்ப அவர் மனநிலை இருக்கும். அதனால், எனக்கு பயமாக இருக்கும். ஓரமாகத்தான் உட்கார்ந்திருப்பேன். அவரோட இயக்கத்தில் 6 படங்கள் நடித்துள்ளேன்.

Continues below advertisement

கதாநாயகியானது எப்படி?

ஆனால், வணக்கம் சார் அப்படி என்பதைத் தவிர எப்படி இருக்கிறீர்கள்? என்று கூட கேட்கமாட்டேன். அந்தளவு பயமாக இருக்கும். அது பக்தியால வந்த பயம். திருமணத்திற்கு பிறகு எனக்கும், பாரதிராஜாவுக்கும் வித்தியாசமான ஒரு பிணைப்பு உண்டானது. என்னைப் பெரிய நடிகை என்று நான் நம்பவில்லை. என்னை உருவாக்கிய பாரதிராஜாவிடம் எப்படி சார் என்னை ஹீரோயினா போட்டீங்க? என்று கேட்டேன்.

அதற்கு அவர் உன் போட்டோ பார்த்தேன். குட்டி கண்ணா அப்படி உக்காந்து இருந்தடினு சொன்னாரு. உன்னை கிராமத்துல வந்து பார்த்தேன். அப்போ கரண்ட் கிடையாது. விளக்கு வச்சுட்டு அந்த விளக்கு வெளிச்சத்துல உன் முகத்தை பார்த்தேன். அதெல்லாம் கேட்கும்போது நன்றாக இருந்தது. அவர் பார்த்து அவர் செதுக்கி எடுத்த ராதா இது. 

பாரதிராஜா:

எனது திருமணத்திற்கு முன்பு எனது அப்பா இறந்துவிட்டாரு. அதன்பின்பு அவரை அடிக்கடி சந்திப்பேன். நிறைய விஷயங்களை பேசுவேன். பயத்துல இருந்தேன். ஷுட்டிங்கில் நிறைய விஷயம் பேசியிருக்கலாமே? என்று நினைத்தேன்.  இந்த ராதா இன்று இந்தளவு நன்றாக இருக்கிறாள் என்றால் அதற்கு ஒரே காரணம் பாரதிராஜா மட்டுமே ஆகும். அவர் எனக்கு அம்மா, அப்பா, குரு மட்டுமில்லாமல் காட்ஃபாதர் ஆவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

உதயா சந்திரிகா என்ற இயற்பெயர் கொண்டவரை ராதா என்ற பெயரில் 1981ம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. அவரது இயக்கத்தில் அவர் அறிமுகமான அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் அறிமுகமான கார்த்திக் பின்னாளில் மிகப்பெரிய நடிகராக உலா வந்தார். 

பின்னர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் நடித்து வருகிறார். தமிழில்தான் அதிகளவு நடித்துள்ளார். தமிழில் கடைசியாக 1991ம் ஆண்டு சாந்தி என்னது சாந்தி என்ற படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். பாரதிராஜா இயக்கத்தில் ராதா அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், காதல் ஓவியம், வாலிபமே வா வா, முதல் மரியாதை, ஒரு கைதியின் டைரி என்ற படத்தில் நடித்துள்ளார்.