முப்பது வயதிலேயே  கரு முட்டைகளை சேமித்து  உறைய வைத்து  விட்டதாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தைரியாக உண்மையை வெளிப்படுத்தியுள்ளார் பிரியங்கா சோப்ரா.


இனிதான் பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு ஹாலிவுட் படங்களில் மட்டுமே நடிக்க முடிவு எடுத்திருப்பதாக  நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்திருந்தார். இதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும்? பத்திரிக்கைகள் இந்த செய்தியை பெரும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்க பிரியங்கா தனது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு தகவலை பகிர்ந்துள்ளர். இதைகேட்டு பலர் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்


முப்பது வயதிலேயே தனது கரு முட்டையை  சேகரித்து உறையச் செய்து விட்டதாக  நடிகை பிரியங்கா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்த முறை தனக்கு மிகவும்  வலி நிறைந்ததாக  இருந்தது” என கூறியுள்ளார். இந்த முறையில் நிறைய ஊசிகளை செலுத்த  வேண்டி இருப்பதால் பெரும்பாலான நேரங்களில்  நிறைய உடல் உபாதைகளை சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என அவர் கூறினார்.அதே நேரத்தில் கருமுட்டை உறையச் செய்யும் முறை என்பது மிகவும் பொருட்செலவு நிறைந்த ஒரு முறையும் கூட. அதனால் இந்த முறையை மேற்கொள்ள நினைக்கும் பெண்கள் நிறைய பணத்தைச் சேர்த்து வைத்திருப்பது நல்லது என அவர் அறிவுரை கூறியுள்ளார். பல லட்சியங்களுக்காக ஓடிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு முப்பது வயது என்பது குழந்தைப் பெற்று கொள்வதற்கு ஏற்ற வயதில்லை.இத்தனை வலிகளை கடந்து இந்த முறை மிகவும் உதவிகரமானது என பிரியங்கா தெரிவித்தார்.


கருமுட்டை உறைதல் என்றால் என்ன?


 நடிகை பிரியங்கா சோப்ராவிற்கும் ஹாலிவுட் நடிகர் நிக் ஜோன்ஸிற்கும் திருமணம் நடந்ததை நாம் எல்லாரும் அறிவோம்.திரை உலகின் மிக பிரபலமான இந்த தம்பதிகள் இவர்கள்.கடந்த ஆண்டு இந்த தம்பதி வாடகைத்தாய் மூலம் தங்களது பெண் குழந்தையைப் பெற்று எடுத்தார்கள். நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொண்ட நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. தற்போது பிரியங்கா இந்த தகவலை தெரிவித்த நிலையில், இந்த கருத்தரிக்கும் முறைகளை பற்றி தெரிந்துகொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.


கரு முட்டையை உறையச் செய்யும்  முறை என்பது  பெண்களில் உடலில் இருந்து கரு முட்டையை எடுத்து உறையச் செய்து சேகரித்து வைத்துக்கொள்ளும் ஒரு முறையாகும். தம்பதிகள் தாங்கள் விரும்பும் காலத்தில் இந்த சேகரித்த கருமுட்டையை ஆண் உயிரணுவுடன் சேர்த்து கருத்தரிக்கச் செய்துகொள்ள முடியும். இதைதான் எக் ஃபிரிசீங் என்கிறார்கள். இளைய வயதில் குழந்தைப் பெற்றுக்கொள்ள விரும்பாத தம்பதிகளுக்கு இந்த முறை மிகவும் பயனுள்ளதாக உள்ளதாக மருத்துவ உலகம் தெரிவிக்கிறது