பூஜா :
தமிழ் சினிமாவில் உள்ளம் கேட்குமே திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா . அதற்கு முன்னதாக வெளியான ஜேஜே , அட்டகாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார் பூஜா. பூஜாவின் அப்பா கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் . அம்மா இலங்கையை சேர்ந்தவர் . பூஜாவின் இயற்பெயர் பூஜா கௌதமி உமா சங்கர். தமிழ் , தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் பரவலாக பூஜா நடித்திருந்தார். தமிழில் பட்டியல் , ஓரம்போ, நான் கடவுள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதில் நான் கடவுள் கடவுள் திரைப்படத்தில் பார்வை குறைபாடு உள்ளவராக , நேர்த்தியாக நடித்த பூஜாவின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. பூஜா எப்போதுமே துரு துருவென இருப்பவர் . ஆனால் தனது வாழ்க்கையில் பல அனுகுமுறைகளை நேர்த்தியாகவே கையாளுகின்றார்.
வார்த்தையில் கவனம் வேண்டும் :
அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் “நான் நல்ல மனிதராக இருக்க நினைக்கிறேன். நான் வார்த்தைகளில் ரொம்ப கவனமாக இருப்பேன். ஏனென்றால் நான் யாரையும் காயப்படுத்தக்கூடாது என நினைப்பேன். ஏனென்றால் எனக்கு அது பல முறை நடந்திருக்கு. மற்றவர்கள் நம்மை காயப்படுத்தும் பொழுது அது எவ்வளவு வலிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும் . வாழ்க்கை நமக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கும். அதை நாம முறையா பயன்படுத்தனும் அவ்வளவுதான் “ என்றார் பூஜா.