பூஜா ஹெக்டேவிடம் பிரபல நடிகர் அத்துமீறல் 

Continues below advertisement

நடிகை பூஜா ஹெக்டே பேசியதாக இன்று காலை முதல் சமூக வலைதளத்தில் தகவல் ஒன்று பரவி வருகிறது. பான் இந்திய படத்தில் நடித்துவந்தபோது அந்த படத்தின்  நடிகர் தனது காரவானில் அனுமதி இன்று நுழைந்ததாகவும். தன்னிடம் அத்துமீற முயன்ற அவரை தான் கன்னத்தில் அறைந்ததாகவும் பூஜா அதன் பின் அந்த நடிகர் தன்னுடன் நடிக்கவில்லை என நடிகை பூஜா ஹெக்டே சொன்னதாக இணையத்தில் தகவல் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் , சமூக வலைதள பிரபலங்கள் உள்ளிட்டோர் இன்று காலை முதல் இந்த தகவலை பகிர்ந்து வருகிறார்கள். இன்னும் சிலர் பூஜா ஹெக்டேவிடம் அத்துமீறிய அந்த நடிகர் இவர் தான் என சிலரது பெயரை குறிப்பிட்டு வருகிறார்கள். 

போலி தகவல் 

இந்த தகவல் உண்மையில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. பூஜா ஹெக்டே அப்படி பேசியதாக எந்த ஒரு ஆதாராமும் இல்லை என்று இது திட்டமிட்டு பரப்பப்பட்ட போலியான தகவல் என்று தெரியவந்துள்ளது. 

Continues below advertisement