டெல்லியில் எங்கள் குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்தீர்கள்?’ என பிரதமர் மோடியை நோக்கி கேள்வி எழுப்பி பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இது தொடர்பாக டெல்லியில் உள்ள காவல் நிலையங்களில் சில பிஜேபி நபர்களால் புகார் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து அந்த போஸ்டர்களை ஒட்டிய 17 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.





இந்தனை தொடர்ந்து ராகுல் காந்தி அவர்களும் என்னையும் கைது செய்யுங்கள்’ (#ArrestMetoo) என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி  ட்விட்டரில் பதிவு செய்து இருந்தார் .இந்நிலையில் , நடிகை ஓவியாவும் டெல்லியில் கைதானவர்கள் பற்றி ட்வீட் ஒன்றை செய்து இருந்தார். இது ஜனநாயகமா என்ற கேள்வியை கேட்டு என்னையும் கைது செய்யுங்கள் என்ற ட்வீட் செய்து இருந்தார் இந்த ட்வீட் இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .





ஏற்கனவே ஓவியா கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை பயணத்தின்போது அவரை அவமதித்ததாக பாரதிய ஜனதா கட்சியின் நடிகர் ஓவியா ஹெலன் மீது போலீஸ் புகார் அளித்துள்ளனர் . பல மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்க பிரதமர் சென்னைக்குச் சென்றபோது ஹெலன் #GoBackModi என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்துள்ளார். அவரது ட்வீட்டுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கட்சியின் சார்பாக புகார் எழுப்பினார்கள் .




இந்த ட்வீட் பொது சீர்கேட்டைத் தூண்டுவதாக இருக்கிறது , அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் என்று ஐடி சட்டத்தின் 69 ஏ பிரிவு r / w 124 ஐபிசியின் ஏ, 153 ஏ, 294 போன்ற பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது . கடந்த டீவீட்டை போன்றே  இந்த ட்வீட்டும் பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது . பலரும் இணையத்தில் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நடிகர் சித்தார்த் இது போன்ற கேள்விகளை கேட்டு மிரட்டலுக்கு ஆளானார். பின்பு பல நடிகர் நடிகைகள் மற்றும் ரசிகர்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்தனர் என்பது நாம் அறிந்ததே. பலரும் இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் தங்களின் விமர்சனங்களை பகிர்ந்து வருகிறார்கள்.