நூர் மாலபிகா தாஸ் (Noor Malabika Das)


அசாம் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட நூர் மாலபிகா தாஸ் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பின் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் . சிஸ்கியான் , வால்காமன் , தீக்கி சட்னி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு கஜோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தி டிரயல் தொடரில் இவர் நடித்திருந்தார் . சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக கத்தார் ஏர்வேஸில் விமாணத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றினார். சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணத்தினால் தனது வேலையை விட்டு மும்பைக்கு குடிபுகுந்தார். 


துக்கிட்டு தற்கொலை


சினிமா தவிர்த்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வந்த  நூர் மாலபிகா தாஸ் மும்பையில் தனது அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் இறந்து ஒரு வார காலம் கடந்துள்ள நிலையில் அப்பகுதி மக்கள் துர்நாற்றம் வீசுவதாக காவல் துறையில் புகாரளித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய சோதனையில் அழுகிய நிலையில் அவரது உடல் கண்டறியப் பட்டுள்ளது. நூர் மாலபிகா தாஸின் டைரிக் குறிப்புகள் மற்றும் அவரது செல்ஃபோனை காவல் துறை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.  மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. 


நூர் மாலபிகா தாஸின் உடலை கைப்பற்ற அவரது குடும்பத்தை தொடர்புகொள்ள காவல் துறை முயற்சித்தனர். ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து உடலை கைப்பற்ற யாரும் வராத காரணத்தினால் உரிமை கோராத உடல்கலை தகனம் செய்யும் தனியார் நிறுவனம் ஒன்றில் உதவியுடன் காவல் துறையினர் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலில் செலுத்தி தகனம் செய்தனர். 


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.


மாநில உதவி மையம் :104


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை,


ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)