சமீப காலமாக போதை பொருள் பயன்பாடு திரைபரபலங்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அதீத போதைக்காக பயன்படுத்துபவர்கள் சிலர் இருந்தாலும், போதை பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் கலாச்சாரமும் அதிகரித்த வண்ணம் உள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக ஏற்கனவே பாலிவுட் திரை உலகை சேர்ந்த பிரபலங்கள், டோலிவுட் மற்றும் மாலிவுட் பிரபலங்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கோலிவுட் பிரபலங்களும் அடுத்தடுத்து சிக்கி வருகிறார்கள்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில் அடிதடி பிரச்சனையில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் நிர்வாகியும், பட தயாரிப்பாளருமான பிரசாந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனை சோதனை செய்ததில், பிரசாத்துக்கு போதை பொருள் டீலரான பிரதீப் என்பவருடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பிரதீப்பிடம் இருந்து நடிகர் ஸ்ரீகாந்துக்காக, பிரசாந்த் அடிக்கடி போதை பொருளை வாங்கியதாக தெரியவந்தது.

பிரதீப் மற்றும் பிரசாந்த் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஸ்ரீகாந்த் ஜாமீனுக்கு முயன்ற போதும், நீதிபதி இவரது மனுவை நிராகரித்தார். போதை பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதால், இவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

ஸ்ரீகாந்த்திடம் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்த போது ஸ்ரீகாந்தின் நண்பர் கிருஷ்ணாவுக்கும் இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கிருஷ்ணாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை செய்ய முடிவு செய்தனர். ஆனால் கிருஷ்ணா கேரளாவுக்கு தப்பி ஓடியதால் தனிப்படை அமைத்து, அவரை தேடி கண்டுபிடித்து போலீசார் விசாரணை செய்யும் நிலை உருவானது.

கிருஷ்ணா தன்னுடைய வாக்கு மூலத்தில், போதை பொருள் சம்பந்தமாக தனக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை என கூறிய நிலையில், அவருடைய பழைய நீக்கப்பட்ட மெசேஜ்களை சோதனை செய்த போது, கிருஷ்ணாவுக்கு போதை பொருள் டீசர் கெவின் என்பவருடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கெவின் மற்றும் கிருஷ்ணாவை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிபதி ஜூலை 10 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த அடுத்த சில கோலிவுட் பிரபலங்கள் இந்த வழக்கில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது தமிழில் விஜய், அஜித், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை நமீதாவுக்கு இந்த போதை மருந்து வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், கூடிய விரைவில் நமீதாவுக்கு சமன் அனுப்பி விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுத்திகிறது. விசாரணைக்கு பின்னர் நமீதா கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் சில தகவலால் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தற்போது வரை தெரியவில்லை .

இவர்களை தவிர இன்னும் பத்து பிரபலங்கள் போலீசாரின் கண்காணிப்பில் வந்துள்ளதாகவும், அவர்களை அடுத்தடுத்து விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.