Metoo.. மீடூ தமிழ் சினிமா உலகை அதிரவைத்த இயக்கம். 3 ஆண்டுகளுக்கு முன்னர் கோலிவுட்டின் பெரும்புள்ளி ஒருவரைச் சுற்றி பரபரப்புப் புகார்கள் எழுந்தன. இந்நிலையில் மீடூ குறித்து நடிகை நதியா அளித்த ப்ஃபேள்ஷ் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


மீடூ இயக்கம் அல்லது நானும் பாதிக்கப்பட்டேன் (#MeToo movement) எனும் இயக்கம் உலக அளவில், பணியிடங்களில் பெண்கள் தங்களுக்கு எதிராக நடந்த பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தாக்குதல்களை ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் வெளியுலகிற்கு அம்பலப்படுத்தும் முறையே இவ்வியக்கத்தின் நோக்கமாகும்.


சமுக வலைதளங்களில் தங்களுக்கு ஏற்பட்ட அவலங்களைப் பகிர்வோர் #MeToo என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி பதிவிட்டனர். ஹாலிவுட்டில், 2017 இல் நடிகை அலிஸ்சா மிலனோ முதன்முதலில் ட்விட்டரில் #Me Too குறியிட்டு, நடிகர் ஹார்வி வெயின்ஸ்டீனால் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து செய்தி வெளியிட்டார்.


2018ல், பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகரும், இயக்குநருமான நானா படேகரால் பணியிடத்தில் தனக்கு ஏற்பட்ட பாலியியல் துன்புறுத்தல்கள் குறித்து ட்விட்டரில் வெளியிட்டார். இதன் மூலம் மி டூ இயக்கம் இந்தியாவிலும் அறிமுகமானது. அதற்குப் பின்னர் கோலிவுட்டில் நடந்த கதையெல்லாம் நாம் அறிந்ததே.


இந்நிலையில், மீடூ இயக்கம் பற்றி நடிகை நதியா கூறியதை அறிவோம்:


நடிகை நதியாவின் இயற்பெயர் ஜரீனா. இவர் மலையாளத்தில் பூவே பூச்சூடவா படத்தில் தான் முதன்முதலில் நடித்தார். பின்னர் தமிழிலும் அதேபடத்தை இயக்குநர் ஃபாசில் எடுக்க, அதிலும் நதியாவே முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர். இன்றளவும் தனது இளமையான தோற்றத்தால் ரசிகர்களை வசீகரிக்கும் அவருக்கு இதைவிட இன்ட்ரோ தேவையில்லை.
தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்தப் பேட்டியில் "ஆண்களுக்கு அவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்க அதிகாரம் இருக்கும் போது பெண்களுக்கு அந்த அதிகாரத்தை மீடூ வழங்கியுள்ளது. ஆண், பெண் என்ற பாலினம் தாண்டி இது ஒரு மனிதம் நிறைந்த இயக்கம். ஆணோ, பெண்ணோ யாரும் யாரையும் அடக்க, ஒடுக்க நினைகக் கூடாது. அந்தக் குரலை ஒலிப்பதே இந்த இயக்கம்.




புகைப்படத்தில் மகள்களுடன் நதியா...


இப்படி ஒரு இயக்கம் வந்ததில் எனக்கு மகிழ்ச்சி தான். ஆனால், இது இப்போதைக்கு மேம்போக்காகத் தான் இருக்கிறது. பெரிய இடங்களில் நடைபெறும் பாலியல் குற்றங்களை மட்டுமே பேசுகிறது. ஆனால் பிரச்சனை அடிமட்டம் வரை இருக்கிறது. அதனால் மீடூ இயக்கத்தின் வேர் இன்னும் நீள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதேபோல் பாலியல் குற்றங்களைக் கையாள இன்னும் வலுவான சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.