சினிமா இன்று பல்வேறு படிநிலைகளை அடைந்துள்ளது என்றாலும் ஒவ்வொரு கட்டத்திலும் கிளாமர் என்பது உடன் பயணித்து கொண்டே தான் வருகிறது. அந்த வகையில் கிளாமர் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம். அப்படி பல ஆண்டுகளாக ரசிகர்களை தன் கைப்பிடிக்குள் அடக்கி வைத்து இருந்த நடிகை மும்தாஜ் பிறந்தநாள் இன்று. 


 




டி. ராஜேந்தரின் 'மோனிஷா என் மோனலிசா' படத்தின் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமான மும்தாஜ் இயற்பெயர் நக்மா. பள்ளி செல்லும் காலத்தில் இருந்தே அவருக்கு நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் இருந்துள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் நடிக்க அவர் எடுத்த சில முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. ஆனால் அவரின் முயற்சிக்கு கிடைத்த பலன் தான் 1999ம் ஆண்டு  'மோனிஷா என் மோனலிசா' படம் மூலம் கிடைத்த அறிமுகம். படம் பெரிய அளவில் வெற்றி முடியவில்லை என்றாலும் நடிகை மும்தாஜ் மார்க்கெட் பல மடங்கு எகிறியது. பல பட வாய்ப்புகள் வந்தும் அவை எதுவும் பெரிய வெற்றிப்படமாக அமையவில்லை.  பல போராட்டங்களை கடந்தவருக்கு 'குஷி' படம் தான் டர்னிங் பாயிண்ட் படமாக அமைந்தது. ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து போனாலும் 'கட்டிப்புடி கட்டிப்புடி டா' பாடல் அவரை படு பேமஸாக மாற்றி ரசிகர்களை கொண்டாட வைத்தது. 


 


குஷி படத்திற்கு பிறகு பிஸியான நடிகையாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வலம் வந்தார். அதே சமயத்தில் பல படத்திலும் ஐட்டம் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறையவே சினிமாவில் இருந்து விலகினார். 


 


ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் தனக்கு இருந்த வேறு மாதிரியான அடையாளத்தை முற்றிலும் மாற்றினார். படத்தில் நடிக்கும் போது அவருக்கு இருந்த பேன் பேஸ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல மடங்கு உயர்ந்தது. 


 



 


பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பிறகு ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளார் மும்தாஜ். அதுவும் சமீப காலமாக புர்காவில் மட்டுமே தோன்றுகிறார். தன்னுடைய வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை கடந்து வந்திருந்தாலும் கடவுளின் தன்னை முழுமையாக சரணடைந்து விட்டதாக தெரிவித்து இருந்தார். அல்லாஹ்வை மனதார ஏற்று கொண்டதாகவும் இதுவரையில் அவர் செய்த அனைத்து விஷயங்களுக்காகவும் தற்போது வருவதாக சமீபத்தில் நடைபெற நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருந்தார். 



44 வயதாகும் மும்தாஜ் இதுவரையில் திருமணம் செய்து கொள்ளாததற்கு அவருக்கு இருக்கும் நோய் தான் காரணம் என தெரிவித்து இருந்தார். தன்னுடைய 25வது வயதில் 'ஆட்டோ இம்யூனிட்டி டிசார்டர்' நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் குடும்ப வாழ்க்கை ஈடுபட முடியாது என்பதால் திருமணமே செய்து கொள்ளவில்லை என தெரிவித்து இருந்தார். 


 


தன்னுடைய வாழ்க்கையில் பல கட்டத்தையும் கடந்து இன்று ஆன்மீக பாதையில் பயணிக்கும் அனைவரின் ஃபேவரட் நடிகை மும்தாஜுக்கு மீண்டும் ஒரு முறை இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!