சினிமாவை தாண்டி சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். சின்னத்திரையின் மூலம் சினிமாவில் சாதித்தவர்கள் பலரும் உள்ளனர். அந்த வரிசையில் இந்தி நடிகை மிருணாள் தாஹூரும் இருக்கிறார். சீரியல்களில் நடித்து வந்த இவர், இந்தியில் சூப்பர் 30, பாட்டியாலா ஹவுஸ் போன்ற படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். இருப்பினும் தென்னிந்திய மொழி படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்த மிருணாள் தாஹூர் சீதா ராமம் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகம் ஆனார்.
தேவதையாக வருணிக்கப்பட்ட நடிகை
சீதா ராமம் படத்தில் மிருணாள் தாஹூரின் நடிப்பை பார்த்து தென்னிந்திய ரசிகர்கள் அவரை தேவதையாக வருணிக்க தொடங்கிவிட்டனர். முதல் படத்திலேயே சென்ஷேனல் ஹீரோயினாக மாறினார். அவர் தும்மினால் கூட அழகு என்றும் பேச தொடங்கினர். காதல் காவியமாக வெளியான சீதா ராமம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. 100 கோடியை தாண்டி நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும் இப்படத்தை கொண்டாடினர். நீண்ட இடைவெளிக்கு பிறகு நல்ல காதல் படமாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ஹிட் அடித்தன. இப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் ஹாய் நானா படத்தில் நடித்தார். இப்படத்திலும் மிருணாளின் நடிப்பு பேசப்பட்டது.
டிரெண்டிங் ஹீரோயின்
இப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகை பட்டியலில் மிருணாள் தாஹூர் இடம்பிடித்திருக்கிறார். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது டிரெண்டிங் ஆகும் பாடல்களுக்கு தனது அழகு சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார். ஹரீஸ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள டீசல் பட பாடல் பட்டி தொட்டியெங்கும் கலக்கியது. உலகளவில் டிரெண்டிங்கும் ஆனது. அந்த பாடலுக்கு மிருணாள் தாஹூர் கொடுத்த முகபாவனையை பார்த்து ரசிகர்கள் சொக்கி போனார்கள். அந்த அளவிற்கு அவரது நடன அசைவுகளையும் ரசிக்க தொடங்கிவிட்டனர்.
அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா?
இன்ஸ்டாகிராமின் புழக்கத்தால் சமீபகாலமாக மொழி தெரியாத பாடல்கள் கூட டிரெண்டாகி வருகிறது. அதற்கு மக்களும் ரீல்ஸ் எடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். அந்த வகையில் நடிகை மிருணாள் தாஹூர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் நேரத்தில் இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்துள்ள அண்ணன பாத்தியா அப்பாட்ட கேட்டியா பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.