தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்த ஒரு பிரபல நடிகை, விஜயுடன் மட்டும் ஒரு முழுநீள திரைப்படத்தில் கூட கதாநாயகியாக நடிக்கவில்லை என்பது பல ரசிகர்களுக்கு தெரியாத சுவாரஸ்ய தகவல்.
விஜய் தனது திரைப்பயணத்தில் சிம்ரன், ஜோதிகா, திரிஷா, அசின், நயன்தாரா, சங்கவி, தேவயானி உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால், அவருடைய சமகாலத்தில் முன்னணி நடிகையாக இருந்த ஒருவருடன் மட்டும் அந்த கூட்டணி உருவாகவே இல்லை. ஆச்சர்யம் என்னவென்றால், அந்த நடிகை விஜயுடன் ஒரே ஒரு பாடலுக்காக மட்டும் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மீனா தான் அந்த நடிகை
விஜயுடன் ஜோடியாக நடிக்காத மீனா
2000-ஆம் ஆண்டு விஜய் நடித்த ஷாஜகான் திரைப்படத்தில் இடம்பெற்ற 'சரக்கு வச்சிருக்கேன்' பாடலில், மீனா சிறப்பு தோற்றத்தில் நடனமாடியிருந்தார். அந்த பாடல் அப்போது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. அதுவே விஜயும் மீனாவும் இணைந்து திரையில் தோன்றிய ஒரே தருணமாகவும் அமைந்தது.
அதன்பிறகு பல இயக்குநர்கள் இருவரையும் இணைத்து நடிக்க வைக்க முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகினாலும், அந்த கூட்டணி இறுதிவரை உருவாகவில்லை. இதனால், தமிழ் சினிமாவில் ரசிகர்கள் எதிர்பார்த்தும் நடக்காத கூட்டணிகளில் விஜய்–மீனா ஜோடியும் ஒன்றாக மாறியது. அதேபோல் நடிகை ரோஜாவுடனும் விஜய் ஒரே ஒரு பாடலில் மட்டுமே நடித்துள்ளார். காவலன் திரைப்படத்தில் ரோஜா அசினுக்கு தாயாக விஜயுடன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மீனா தனது திரைப்பயணத்தில் ரஜினிகாந்துடன் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசன், சரத்குமார், பிரபு, முரளி, கார்த்திக், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் ஹிட் ஜோடியாக வலம் வந்தார். ஆனால், விஜயுடன் மட்டும் ஒரு முழுநீள திரைப்படத்தில் கூட இணைந்து நடிக்காதது ரசிகர்கள் மனதில் ஒரு குறையாகவே இருந்துவிட்டது. இன்று வரை விஜய் மற்றும் மீனா இணைந்து நடித்த ஒரே காட்சியாக 'ஷாஜகான்' படத்தின் 'சரக்கு வச்சிருக்கேன்' பாடல் மட்டுமே ரசிகர்களின் நினைவில் இருக்கிறது.
ஜனநாயகன் வசூல்
தற்போது தமிழக முதல்வராக இருந்து வரும் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜூலை 23 ஆம் தேதி வெளியானது. 4 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் ரூ 200 கோடி வசூல் செய்துள்ளது.
