பவன் கல்யாண் படத்தில் தான் இரண்டாவது ஹீரோயினாக நடிப்பதாக வெளியான தகவலுக்கு நடிகை மாளவிகா மோகனன் காட்டமான பதில் ஒன்றை அளித்துள்ளார். 


கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான மலையாளப் படமான பட்டம் போலே படத்தின் மூலம் திரையுலகில் மாளவிகா மோகனன் அறிமுகமானார். தொடர்ந்து நிர்நயகம், தி கிரேட் ஃபாதர் உள்ளிட்ட- மலையாளப் படங்களில் நடித்தார்.  கன்னடத்தில் நானு மட்டு வரலட்சுமி என்ற படத்தின் மூலம்  அடியெடுத்து வைத்தார். இதன் பின்னர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசிகுமார் ஜோடியாக எண்ட்ரீ கொடுத்த மாளவிகாவுக்கு, இரண்டாவது படமே விஜய்க்கு ஜோடியாக “மாஸ்டர்” படம் அமைந்தது. 


இதனால் தமிழ் திரையுலகில் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனுஷ் நடித்த மாறன் படத்தில் மட்டுமே மாளவிகா மோகனன் நடித்தார். தற்போது தங்கலான், யுத்ரா ஆகிய தமிழ் படங்களில் அவர் நடித்து வருகிறார். இதற்கிடையில் மலையாளம், கன்னடம், தமிழ் திரையுலகைத் தொடர்ந்து தெலுங்கிலும் மாளவிகா நடிக்க தொடங்கியுள்ளார். 


ஆனால் அவர் எந்தப் படத்தில் கமிட்டாகி உள்ளார். அந்த படத்தில் யார் ஹீரோ என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகாமல் உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேசமயம் பிரபாஸ் படத்தில் தான் மாளவிகா மோகனன் ஹீரோயினாக கமிட் ஆகியிருக்கிறார் என சொல்லப்படுகிறது. 


இதற்கிடையில் அவர் பவன் கல்யாண் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில், அதனை மறுத்துள்ள மாளவிகா காட்டமான ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பவன் கல்யாண் மீது மிகுந்த மரியாதை உள்ளது, ஆனால் நான் இந்த படத்தின் ஒரு பகுதியாக இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் தற்போது  அற்புதமான தெலுங்கு திரைப்படத்தில் (இரண்டாவது ஹீரோயினாக அல்ல) நடித்து வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.