இயக்குநர் சுந்தர்.சியின் இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியான 'உன்னை தேடி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா.  19 வயது பாட்டாம்பூச்சியின் அழகான முகம், வசீகரமான தோற்றம், கியூட் ஸ்மைல் இவை அனைத்தும் தமிழ் ரசிகர்களை சுண்டி இழுத்தது. அன்றய இளைஞர்களின் கனவுக்கன்னியாக விளங்கிய மளவிகாவிற்கு ஏனோ பெரிய அளவில் பட வாய்ப்புகள் அமையவில்லை. 

Continues below advertisement


 



தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த மாளவிகா பல படங்களில் ஹீரோயினாக நடித்தாலும் துணை கதாபாத்திரங்களிலும் எந்த ஒரு தயக்கமும் இன்றி நடித்தார். அப்படி அவர் நடித்த ஒரு படம் தான் சேரன் இயக்கத்தில் வெளிவந்த 'வெற்றிக்கொடி கட்டு' திரைப்படம்.


முரளி, மீனா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தில் மாளவிகாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற "கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு" பாடல் மூலம் தமிழ்நாடு மக்களின் இதயங்களுக்கு நெருக்கமானார். ஒரே பாடலில் மிகவும் பிரபலமான மாளவிகாவுக்கு அதுவே அடையாளமாக மாறியது. 


தற்போது 'கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு' பாடலுக்கு செல்ஃபி ஷாலு என்ற இன்ஸ்டா பிரபலம் ரீல்ஸ் மூலம் மாளவிகா போலவே உடை அணிந்து நடனமாடியுள்ளார். ஷாலினியின் பல ரசிகர்களும் நீங்க மாளவிகா போலவே இருக்கீங்க என கமெண்ட் செய்தும் லைக்ஸ்களை குவித்தும் வரும் நிலையில் எதிர்பாராத நேரத்தில் ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸாக நடிகை மாளவிகாவே ஷாலினியின் இந்த ரீல் வீடியோவுக்கு "வெரி நைஸ்" என கமெண்ட் செய்துள்ளார். ஷாலினியும், மாளவிகாவின் கமெண்டுக்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார். 


 






வெற்றிக்கொடி கட்டு திரைப்படம் மாளவிகாவின் திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடலை போலவே மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'சித்திரம் பேசுதடி' திரைப்படத்தில் இடம்பெற்ற 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்...' என்ற பாடலுக்கு நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார். 


 



சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்ட மாளவிகா சோசியல் மீடியாவில் தற்போது மிகவும் ஆக்டிவாக அவரது குடும்பத்துடன் வெக்கேஷன் சென்ற புகைப்படங்களை போஸ்ட் செய்து வருகிறார். 2022ம் ஆண்டு நடிகர் ஜீவா, மிர்ச்சி சிவா நடிப்பில் உருவான கோல்மால் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் மாளவிகா. ஆனால் அப்படம் சில காரணங்களால் வெளியாகாமல் உள்ளது. 


நல்ல வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் மளவிகாவை நான் திரையில் பார்க்கலாம் என அவரின் தீவிர ரசிகர்கள் ஆவலாக காத்து கொண்டு இருக்கும் நிலையின் ஷாலினியின் இந்த வீடியோ மளவிகாவை ஞாபகப்படுத்தி லைக்ஸ் அள்ளி வருகிறது.