பிரபல நடிகையும், விஜேவுமான மகாலட்சுமியை தயாரிப்பாளர் ரவியை திருமணம் செய்துள்ள சம்பவம் கோலிவுட்டின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. 






2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி ரசிகர்களிடத்தின் நன்கு பிரபலமானவர் மகாலட்சுமி. ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற இவர், நிறைய நிகழ்ச்சிகளில் பணிபுரியத் தொடங்கி நிலையில் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். ராதிகா நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியல் மூலம் மகாலட்சுமியின் சின்னத்திரை பயணத்தில் மிக முக்கியமானதாக அமைந்தது. தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செல்லமே, முந்தானை முடிச்சி, இரு மலர்கள், அவள் என பல சீரியல்களில் அவர் நடித்திருந்தார்.



இதனிடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மகாலட்சுமிக்கு அனில் என்பவருடன் ஏற்கனவே திருமணம் நடைபெற்று இருவரும் விவாகரத்துக்காக விண்ணப்பித்திருந்தனர். அப்போது மகாலட்சுமி மீது பிரபல சீரியல் நடிகை ஜெய் ஸ்ரீ கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். அதில் தன் கணவரும், நடிகருமான ஈஸ்வருக்கும், மகாலட்சுமிக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தெரிவித்தார். இதனை மறுத்த மகாலட்சுமி ஜெய்ஸ்ரீயும், அனிலும் இணைந்து தனக்கு பிரச்சனை உருவாக்குவதாக விளக்கமளித்தார். 






இந்நிலையில் மகாலட்சுமி பிரபல தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவிந்திரன் சந்திரசேகரை திருமணம் செய்துள்ளார். இதன் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. இதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ள மகாலட்சுமி அதில் என் வாழ்க்கையில் நீ கிடைத்ததால் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.  உன் அன்பினால் என் வாழ்க்கையை நிரப்புகிறாய். லவ் யூ அம்மு என தெரிவித்துள்ளார்.