நேற்று கனகாவுடன் குட்டி பத்மினி இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது. ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான கனகா (Kanaka), ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். இந்த நிலையில் குட்டி பத்மினியுடன் வெளியான கனகாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

 

கரகாட்டக்காரன் படத்திற்கு பிறகு  ஒருசில படங்களில் மட்டுமே நடித்த நடிகை கனகா தனிப்பட்ட காரணங்களுக்காக சினிமாவில் இருந்து விலங்கினார். கனகா திரையில் இருந்து விலகுவதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், அவரது தந்தையுடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

 

சென்னையில் உள்ள வீட்டில் வேலைக்காரர்கள் கூட இல்லாமல் கனகா மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்த சூழலில் தான் கனகாவை குட்டி பத்மினி சந்தித்து பேசியுள்ளார். கனகாவுடனான சந்திப்பு குறித்து பேசிய குட்டி பத்மினி, “அப்பாவுடன் சமாதானம் ஏற்பட்டதாக கூறியுள்ள கனகா ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்கள். அவங்க யாரையும் சந்திப்பதில்லை என கேள்வி பட்டிருந்தேன். எதேச்சையாக கனகாவின் வீட்டுப்பக்கம் சென்றேன். அப்போது அவரது வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததால், கனகா வெளியே வரட்டும் என காத்திருந்தேன். நான் காரில் காத்திருக்கும்போதே கனகா வெளியே வந்தார். 

 

அப்புறம் இருவரும் பார்த்து பேசிக் கொண்டதால், அவங்க ரொம்ப சந்தோஷமானாங்க. கனகா அம்மா தேவிகா மேம் பற்றி நிறைய பேசினோம். கனகா அவங்க அம்மா வாழ்ந்த வீட்டில் இருக்கிறார். அது ரொம்ப பாழடைந்த வீடு போல் உள்ளது. இப்படி ஒரு வீட்டில் ஏன் இருக்க வேண்டும் என கேட்ட நான், பிளாட் வாங்கி அதில் வாழலாமே என்றேன். அதற்கு தன்னோட வீடு இருந்த இடம் சாலை விரிவாக்கத்திற்காக அரசாங்கம் எடுத்துள்ளதாகவும், அதற்கான இழப்பீட்டு தொகை வரவேண்டி இருக்கு காத்திருப்பதாகவும் கூறியதாக குட்டி பத்மினி பதிவு செய்தார். 

 

மேலும், கனகா மட்டுமே வாழ்ந்து வருவதால் இருக்கும் பணத்தில் புது வீடு வாங்கி சந்தோஷமாக வாழு என்றும், வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று மகிழ்ச்சியாக இருக்கும்படி அறிவுருத்தியதாக குட்டி பத்மினி தெரிவித்துள்ளார். இது மட்டுமில்லாமல் இவ்வளவு நாள் ஏன் அவரை பார்க்காமல் விட்டு விட்டோம் என்ற எண்ணம் தோன்றியதாகவும் குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்.