80-90 களில் கோலிவுட்டி முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இயக்குநர் சுந்தர்.சி அவர்களை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட குஷ்புவிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அரசியலில் ஈடுபாட்டுடன் இருக்கும் குஷ்பு தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் குஷ்பு தான் 20 கிலோ உடல் எடையை குறைத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தார் அது வைரலாக ஷேர் செய்யப்பட்டது. மேலும் தான் தற்போது ஆரோக்யமாக இருப்பதாகவும் , தனது புகைப்படத்தை பார்த்து உங்களில் சிலர் உடல் எடையை குறைக்க வேண்டும் என தோன்றினால் அதுவே எனக்கு போதும் என்றும் பகிர்ந்திருந்தார்.
தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் குஷ்பு. இறுதியாக அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்தின் முறை பெண்ணாக நடித்திருந்தார். இந்த நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கும் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார் குஷ்பு. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிந்த குஷ்பு." சிறந்த இயக்குநர் சீனு ராமசாமியை சந்தித்தேன்..அருமையான கதையை கேட்டேன்..சிறப்பாக அமைய பிராத்திக்கிறேன் “ என குறிப்பிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கும் சீனுராமசாமி முன்னதாக பென்னிகுவிக் வாழ்க்கையை படமாக்க இருப்பதாக தெரிவித்திருந்தார்.இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். “வணக்கம் கர்னல் பென்னிகுவிக் வாழ்க்கை சரிதத்தை படமாக எடுக்க விழைகிறேன்” என்றார் சீனு ராமசாமி. அந்த படத்தில்தான் குஷ்பு தற்போது ஒப்பந்தமாகியிருப்பாரோ என சந்தேகிக்கப்படுகிறது. ஆனாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் மாமனிதன், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களும் ஜி.வி. பிரகாஷ் நடித்திருக்கும் இடிமுழக்கம் படமும் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.