மகள் திருமண அழைப்பிதழ் கொடுக்கும் நிகழ்வில் பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜயை சந்தித்த சம்பவத்தை நடிகை குஷ்பு நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். 

Continues below advertisement

கடந்த ஜூன் 25ம் தேதி நடிகை குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர்.சி தம்பதியின் மூத்த மகள் அவந்திகா திருமணம் கோவாவில் நடைபெற்றது. இதில் ஒரு சில சினிமா நட்சத்திரங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில் மகள் திருமணம் பற்றி குஷ்பு நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். 

அதில், “வீட்டில் மகள் இருந்தால் அவளை ஒரு நல்ல இடத்தில் கட்டிக்கொடுக்க வேண்டும் என்பது பெற்றோரின் கனவாகும். அப்படித்தான் என் மகளுக்கும் சரியான இடம் அமைந்தது. 25 வயதுக்குப் பின்னால் திருமணம் பற்றி பேச வேண்டும் என சொல்லியிருந்தேன். மாமியார் என சொல்வதைக் காட்டிலும் எனக்கு இரு மகள்கள் இருக்கும் நிலையில் ஒரு மகன் கிடைத்துள்ளார் என சொல்லலாம். என் மகள் திருமண உணர்வை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அவந்திகா அப்படியே சுந்தர்.சி மாதிரி என சொல்லலாம். உணர்வுகளை அவ்வளவு எளிதில் வெளிக்காட்ட மாட்டார். 

Continues below advertisement

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் முடிவு செய்தோம். சிறிய அளவில் திருமண ஏற்பாடுகள் போதும் என மகள் சொல்லி விட்டார். மொத்தமே 150க்கும் குறைவான பேர் தான் பங்கேற்றார்கள். பிரதமர் மோடியிடம் பத்திரிக்கை கொடுத்தபோது தான் இது வெளியில் தெரிந்தது. இது ஒரு காதல் திருமணம். மகள்களிடம் வெளிப்படையாக இருப்பதால் எதுவும் மறைப்பதில்லை. அப்படியாக என் மகள் காதலிப்பதாக சொல்லியதும் நான் அவரை சந்தித்தேன். அவர் வணிகம் சார்ந்த கப்பற்படையில் அலுவலராக உள்ளார். 

உயரம் முதற்கொண்டு எல்லாம் சரியாக இருந்தது. ஆனால் நான் ஒரு விஷயத்தை என் மகளிடம் சொன்னேன். வாழ்நாள் முழுவதும் அவனுடன் தான் வாழ்வேன் என முடிவு செய்து சொல்லும் நாளில் அப்பாவிடம் கூறலாம் என தெரிவித்தேன். ஏனென்றால் சுந்தருக்கு 6 மாதம் திருமண வாழ்க்கை வாழ்ந்து விட்டு பின்னர் செட் ஆகவில்லை சொல்வதெல்லாம் பிடிக்காது. அதனால் வீட்டுக்குள்ளேயே நான் சீக்ரெட்டாக வைத்திருந்தேன். 

அப்படியாக ஒருநாள் அப்பாவிடம் காதலைப் பற்றி சொன்னாள். ஒரு வருடம் டைம் கேட்டு திருமணம் செய்துக் கொண்டார்கள். அவந்திகாவுக்கு நாங்கள் தேடியிருந்தாலும் ஷ்ரவன் போல மாப்பிள்ளை கிடைத்திருக்காது. என் மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது 10 நாட்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு உடன் இருந்தார். பிரதமர் மோடியை அழைக்க வேண்டும் என்பது திட்டம் இல்லை. இருந்தாலும் ஒரு மெயில் மட்டும் தான் அனுப்பினேன். உடனடியாக சந்திக்க அனுமதி கொடுத்தார். 

Also Read: Ravi Mohan: ரவிமோகனிடம் ரூ.40 லட்சம் கேட்டோம்.. ஆனால் மாத பராமரிப்புக்கு இல்ல.. ஆர்த்தி அம்மா கண்ணீர் பேட்டி

அப்போது மருமகனிடம் இந்தி தெரியுமா கேட்டார். அவர் ஏதோ ஓரளவு பேசினார். சுந்தர்.சியிடம் கேட்டபோது இந்தி தெரியாது போடா குரூப்பை சேர்ந்தவன். அதனால் அந்த மொழியை கற்காமல் போய்விட்டேன் என பிரதமரிடம் தெரிவித்தார். என்னைப் பார்த்து நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டியது தானே என கேட்க, 30 ஆண்டுகளாக கற்றுக் கொடுக்க போராடுகிறேன் முடியவில்லை என சொன்னேன். பின்னர் மணமக்களிடம் வாழ்க்கை பற்றி பேசினார். பின் என்  மாமியார் பற்றி கேட்டார். 

கிட்டதட்ட 35 நிமிடங்கள் அந்த சந்திப்பு நடந்தேன். திருமணத்திற்காக கூப்பிட்ட அனைவரும் வந்தார்கள். முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்தோம். பத்திரிக்கை வைக்கும்போதே வருவது கஷ்டம் தான். நான் இப்போது தான் பதவியேற்றுள்ளேன். சட்டசபை தொடங்க போகிறது. இப்போது லீவு போட்டால் சரியாக இருக்காது” என சொன்னார்.