நடிகை கிரண் நேர்காணல் ஒன்றில் வாழ்க்கையில் தான் செய்த பிழைகள் பற்றியும், தனது காதல் தோல்வி பற்றியும் தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவில் கிரண்


ஜெமினி படம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் கிரண். தொடர்ந்து வில்லன், அன்பே சிவம், திவான், பரசுராம், தென்னவன், நியூ உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் நடிகர் விஜய் நடித்த திருமலை, சரத்குமார் நடித்த அரசு, அர்ஜூன் நடித்த சின்னா, விஷால் நடித்த திமிரு உள்ளிட்ட சில  படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். சில காலம் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் இருந்த கிரண், மீண்டும் விஷால் நடித்த ‘ஆம்பள’ படம் மூலம் துணை கேரக்டரில் நடிக்க தொடங்கினார். 


இதன்பின்னர், சகுனி, முத்தின கத்திரிக்கா,இளமை ஊஞ்சல் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்தார். இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை கிரண், தனது வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தெரிவித்துள்ளார்.


கோவாவில் செட்டில் ஆனது ஏன்?


அதில், ‘மும்பை நெருக்கடி மிகுந்த ஒரு நகரமாக இருப்பதால் மிகுந்த மன அழுத்தம் உண்டாகிறது. இதனால் பல பிரபலங்கள் கோவாவில் செட்டிலாகி விடுகின்றனர். அந்த வகையில் கோவாவுக்கு சுற்றுலா சென்ற நான் அங்கு செட்டிலாகி விட்டேன். அங்கிருக்கும் பசுமை, அமைதி என அழகாக இருக்கும். அதேசமயம் நான் சென்னையை மிஸ் பண்ணுகிறேன். 
 
மேலும் நான் அடுத்தடுத்து 5 சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தேன். ஆனால் யாருமே என்னுடன் அதன்பிறகு பணிபுரியவில்லை. ஏன் என திரைத்துறையில் இருப்பவர்களிடம் கேட்க வேண்டும் என நினைக்கிறேன். அதனால் சில காலம் சினிமாவில் நான் தோன்றவில்லை. இப்பவும் நான் ரெடியாகவே இருக்கிறேன். அதேசமயம் காம்ப்ரமைஸ், அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு நான் ஆள் கிடையாது


காதல் தோல்வி


நான் செய்த சில பிழையால் நிறைய வாய்ப்புகளை இழந்தேன். நான் ஒரு நபரை கண்மூடித்தனமாக காதலித்தேன். அவரை திருமணம் செய்துக் கொண்டு வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என தவறான முடிவை எடுத்திருந்தேன். இது என் வாழ்க்கையில் எடுத்த மிக மோசமாக முடிவாகும். ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிவடைந்தது. அது என்னை முற்றிலுமாக பின்னடைவாக அமைந்தது. 


நான் திருமணம் செய்துக்கொள்ளாமல் சிங்கிளாக இருக்கிறேன். நான் திருமணம் செய்துக் கொள்ள விரும்பவில்லை.  நான் ரொம்ப எமோஷனான நபர். சிறிதாக உடைந்தால் கூட அழுது விடுவேன். என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி போட்டோக்களை பதிவிட்டு வருகிறேன். இதைப் பார்த்து, உங்க ரேட் என்ன, எவ்வளவு பணம் வாங்குறீங்க என பலரும் தரக்குறைவாக பேசினர். அப்போது அழுதுவிட்டேன். எனது பெற்றோர்கள் தான் எனக்கு துணை நின்றார்கள். நான் நல்ல குடும்பத்தில் பிறந்த பெண். நான் தப்பான வழியில் செல்ல மாட்டேன். பிகினி அணிவது எனக்குப் பிடிக்கும். 15 வருஷத்துக்கு முன்னாடி வின்னர் படத்திலேயே பிகினி அணிந்தவள்.  இப்போ எந்த நடிகை பிகினி அணியாமல் இருக்காங்க சொல்லுங்க என பேசியுள்ளார்.