மறைந்த வாலிப கவிஞர் வாலி, தன்னுடைய நினைவுகளை பல தளங்களில் பகிர்ந்துள்ளார். ஆனால், பிரபலங்கள் பலரை கொண்டு அவரது நினைவுகளை பெற்று பொக்கிஷமாய் பாதுகாத்து வருகிறது வசந்த் டிவி. அவ்வாறு வசந்த் டிவியில் ஒளிபரப்பான ஒரு பேட்டியில் நடிகை குஷ்பூ, வாலியிடம் நிறைய கேள்விகளை கேட்டார். அவ்வாறு அவர் கேட்ட கேள்விகளுக்கு வாலி அளித்த பதில்கள் இதோ...
குஷ்பூ:
மச்சி... ஓப்பன் தி பாட்டில்னு எழுதியிருக்கீங்க... நீங்க ஓப்பன் பண்ணியிருக்கீங்களா...?
வாலி:
ஒரு காலத்தில் ஓப்பன் பண்ணிட்டு தான் இருந்தேன். அப்புறம் விட்டுட்டேன். 20 ஆண்டுகள் அந்த பழக்கம் எனக்கு இருந்தது. இசையமைப்பாளர்கள், கவிஞர்கள் பலரும் மதுபழக்கம் கொண்டவர்களாகவே இருந்தனர். இயக்குனர் முத்துராமனுக்கு நான் 3 மூன்று படங்களில் வசனம் எழுதியுள்ளேன். முதல் நாள் மட்டும் சூட்டிங் செல்வது என் வழக்கம்; அதுவும் பூஜைக்காக. 1977 ல் முத்துராமன் படத்திற்காக சேலத்தில் முதல் நாள் சூட்டிங் முடித்து, இரவு புறப்பட தயாரான போது, நண்பர்கள் ஒரு வெளிநாட்டு ஸ்காட்ஜ் எடுத்து ஓப்பன் செய்தார்கள். நானும் தயாரானேன். முத்துராமன் பார்த்தார். ‛என்ன அண்ணே... நீங்களும் இப்படி பண்றீங்க... கண்ணதாசனுக்கும் இப்படி தான் குடிச்சு உடம்ப கெடுத்துக்கிறாரு... நீங்களும் இப்படி குடிச்சா எப்படிணே...’ என என்னிடம் கேட்டார். நான் அவரிடம் ஒன்று கூறினேன்; இதை செய்தால் நான் இனி குடிக்க மாட்டேன் என்று. அவரும் அதை உடனே செய்தார். அப்போதே அவர் தலையில் அடித்து இனி குடிக்க மாட்டேன் என நான் சாத்தியம் செய்தேன். இன்று வரை நான் குடிப்பதில்லை. நான் என்ன சொன்னேன்? அவர் என்ன செய்தார் என்பதை நீங்கள் அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்.
குஷ்பூ:
குயிலை பிடிச்சு கூண்டில் அடிச்சு பாடல் சூட்டிங் போது எனக்கு தமிழ் தெரியாது. பின்னாளில் தமிழ் தெரிந்து அந்த பாடலை கேட்ட போது, அதில் வலி இருந்தது தெரிந்தது. உணர்வுகளை கொண்டு வரும் கவிஞருக்கு அந்த அனுபவம் இருக்குமா?
வாலி:
100 சதவீதம் உண்மை. நமக்கு ஒரு கமெண்ட், இசையமைப்பாளர் மீது இருக்க வேண்டும். இல்லையென்றால் நினைத்த வரிகள் வராது. டியூன் என்ன பைபிளா மாற்ற கூடாதா? இளையராஜாவிடம், ரஹ்மானிடம் நிறைய மாற்றியிருக்கிறேன். நிறைய பாடல்கள் எழுதியதால் என் மீது மதிப்பு இருக்கும். அதைவிட இசையமைப்பாளருக்கும், கவிஞருக்கும் நல்ல ப்ரெண்ட்ஷிப் இருக்கும். அது தான் நல்ல வரிகளை கொண்டு வரும்.
இவ்வாறு அந்த பேட்டியில் வாலி சுவாரஸ்யமான பதிலளித்தார். குஷ்பூவும் உற்சாகமாக கேள்விகளை கேட்டிருப்பார். அந்த வீடியோவை இங்கு கண்டு ரசிக்கலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்