ராஜ்கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் தலைவர் 173 படத்தில் இருந்து இயக்குநர் சுந்தர் சி விலகுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுந்தர் சி விலகியதற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் ரசிகர்கள் இதனை வைத்து மீம்ஸ் வெளியிட்டு ட்ரோல் செய்து வருகிறார்கள். அப்படி ரஜினி மற்றும் குஷ்புவை வைத்து ரசிகர் ஒருவர் வெளியிட்ட மீம் நடிகை குஷ்பு கண்ணில் பட்டுள்ளது. இந்த பதிவிற்கு அவர் கொடுத்துள்ள பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது

Continues below advertisement

தலைவர் 173 படத்தில் சுந்தர் சி விலகல்

கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக கடந்த வாரம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. ரஜினியின் அருணாச்சலம் , கமலின் அன்பே சிவம் படத்தை இயக்கிய சுந்தர் சி இந்த படத்தை இயக்கவிருந்தார். இதனைத் தொடர்ந்து நேற்று நவம்பர் 13 ஆம் தேதி தலைவர் 173 படத்தை தான் இயக்கப்போவதில்லை என அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார் சுந்தர் சி. " தனிப்பட்ட காரணங்களுக்காக தான் இந்த படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி தனது அறிக்கையில் கூறியுள்ளார். " 

ரஜினி குஷ்புவை வைத்து பதிவு 

தலைவர் 173 படத்தில் இருந்து சுந்தர் சி விலகியது குறித்த உண்மையான காரணம் குறித்து ரசிகர்கள் விவாதித்து வருகிறார்கள். கதை தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சுந்தர் சி இப்படத்தில் இருந்து விலகியிருக்கலாம் என கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் ரசிகர்கள் இந்த நிகழ்வினை வைத்து மீம்ஸ் பகிர்ந்து வருகிறார்கள். ரசிகர் ஒருவர்  ரஜினி ஒருவேளை குஷ்புவுடன் ஐட்டம் பாடலுக்கு நடனமாட கேட்டிருப்பாரோ? இதனால் சுந்தர் சி இந்த படத்தில் இருந்து விலகியிருக்கலாம் என மீம் பதிவிட்டிருந்தார்

Continues below advertisement

கொந்தளித்த குஷ்பு 

இந்த பதிவு சுந்தர் சி மனைவி நடிகை குஷ்பு கண்ணில் படவே அவர் அதற்கு செம ரிப்ளை ஒன்று கொடுத்துள்ளார் " இல்ல உங்க வீட்ல இருந்தே யாரையாவது ஆட வைக்கலாம்னு யோசிச்சோம் " என குஷ்பு அந்த் பதிவில் கமெண்ட் செய்துள்ளார்