டாஸ்மாக் ஊழல் சர்ச்சையில் பிரபல நடிகை கயடு லோஹர் சம்பந்தப்பட்டிருப்பதாக வெளியான தகவல் பரவலாக பேசுபொருளானது. இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் நடத்திய பார்ட்டியில் கயடு லோஹர் கலந்துகொண்டதாகவும் அதற்கு அவர் 35 லட்சம் சம்பளமாக பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முதல்முறையாக கயடு லோஹர் மனம் திறந்து வெளிப்படையாக பேசியுள்ளார்

Continues below advertisement


குற்றச்சாட்டு குறித்து கயடு லோஹர் விளக்கம் 


டிராகன் படத்தில் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகரகளிடையே பிரபலமானவர் நடிகை கயடு லோஹர். டாஸ்மாக் மது விற்பனையில் 1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக கூறி அமலாக்கத் துறையினர் சமபந்தப்பட்டவர்களின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இந்த விசாரணையில் கயடு லோஹர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் ஊழலில் சம்பந்தபட்டவர்கள் நடத்திய பார்ட்டியில் விருந்தினராக கலந்துகொள்ள அவர் 35 லட்சம் சம்பளம் வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து கயடு லோஹரை சமூக வலைதளத்தில் 35 லட்சம் என குறிப்பிட்டு பலர் ட்ரோல் செய்து வந்தனர். இதுகுறித்து தற்போது முதல்முறையாக கயடு லோஹர் மனம் திறந்து பேசியுள்ளார். 



இரவு தூங்க முடியல 


கயடு லோஹர் கூறியதாக கோலி சென்சார் என்கிற எக்ஸ் தளம் இப்படி கூறியுள்ளது. "மக்கள் என்னைப் பற்றி என்ன பேசினாலும், இதுபோன்ற ஒரு விஷயம் என்னை இவ்வளவு கடுமையாக பாதிக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. நான் தூங்கச் செல்லும் போதெல்லாம், மக்கள் என்னைப் பற்றி இப்படி ஏதாவது நினைப்பார்கள் என்று நினைப்பது எனக்கு மிகவும் கடினம், ஏனென்றால் நான் யாரைப் பற்றியும் இப்படி ஒருபோதும் நினைக்க மாட்டேன். என் கனவுகளைத் துரத்துவதை விட, நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை.


இந்தக் கருத்துக்களைப் பார்க்கும் போதெல்லாம், மக்கள் என்னைப் பற்றிப் பேசும் போதெல்லாம், அதைக் கையாள்வது எளிதல்ல. நான் இந்த வட்டத்திலிருந்து வரவில்லை என்பது எனக்குத் தெரியும், ஆம், மக்கள் என்னைப் போன்ற கலைஞர்கள் மீது எளிதில் கரும்புள்ளிகளை வைக்க முடியும். ஆனால் அது வரம்புகளை மீறக்கூடாது."