நடிகையுடன் தொடர்பு என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் நடிகை கஸ்தூரி காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

சர்ச்சையில் சிக்கிய விஜய்

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய விஜய் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026ல் முதல்முறையாக போட்டியிடவுள்ளார். இதனிடையே விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வரவுள்ளது. அந்த மனுவில் விஜய்க்கு நடிகை ஒருவருடன் தகாத உறவு இருப்பதாக குறிப்பிடப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெயரை சங்கீதா தரப்பு குறிப்பிடாத நிலையில் பலரும் நடிகை த்ரிஷா பெயரை கூறி விமர்சித்து வருகின்றனர். 

விஜய், த்ரிஷா, சங்கீதா தரப்பு இதனை உறுதிச் செய்யாத நிலையில் நாளொருமேனி பொழுதொரு வண்ணமாக வதந்தி ரெக்கைக்கட்டி வருகிறது. இதனை மேலும் உறுதிப்படுத்தும் வண்ணம் சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய், த்ரிஷா இருவரும் ஜோடியாக ஒரே காரில் ஒரே வண்ண ஆடையில் வந்தனர். இதனால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இதனை எப்படி எடுத்துக் கொள்வது என புரிந்துக் கொள்ள முடியாமல் தவெகவினர், விஜய் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். 

Continues below advertisement

விமர்சித்த கஸ்தூரி

இந்த நிலையில் விஜய் பெயரை குறிப்பிடாமல் நடிகையும், அரசியல்வாதியுமான கஸ்தூரி அவரை மறைமுகமாக விமர்சித்துள்ளார். கஸ்தூரி வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக அரசியலிலே பெரியாளா வரணும்னா என்ன பண்ணனும்? மனைவி துணைவி இணைவின்னு  தெனாவட்டா மெயின்டைன்  பண்ணனும். கடைசியிலே இதுலதான் போட்டி போல.  இதுக்கு எதுக்கு லாயர் நோட்டீஸ், அறிக்கை, பெண்ணியம் புண்ணாக்கியம் எல்லாம்” என கேட்டுள்ளார்.

கவலையளிக்கும் விஷயம்

இதேபோல் தயாரிப்பாளர் தனஞ்செயன் வெளியிட்டுள்ள பதிவில், “மிகுந்த புகழ் பெற்றவர்கள், சாதாரண மக்களுக்கு நேர்மையான மற்றும் மரியாதையான வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை எடுத்துக்காட்டாக காட்டும் பெரிய பொறுப்பு உடையவர்கள். அந்த பொறுப்பை அவர்கள் புறக்கணித்தால், மக்கள் அவர்களிடம் வைத்திருந்த மரியாதையை இழந்து விடுவார்கள். ஒவ்வொரு மனிதருக்கும் குடும்பமே முதன்மை. குடும்பத்தை அலட்சியமாக நடத்தி, மனதளவிலோ உணர்ச்சியளவிலோ காயப்படுத்தினால், அவர்களிடம் இருந்த அன்பும் மரியாதையும் மெதுவாக குறைந்து போய்விடும்.

இப்படியான செயல்களை எந்த சூழ்நிலையிலும் சாதாரணமாகவோ அல்லது நியாயப்படுத்தியோ பார்க்க முடியாது. குடும்பத்தை முக்கியமாக கருதும் ஒருவராக, சில முன்னணி நடிகர்கள் தங்கள் செயல்களால் மில்லியன் கணக்கான ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவது எனக்கு மிகவும் கவலையளிக்கிறது” என தெரிவித்துள்ளார். 

இதேபோல், “விவாகரத்து பண்ணிட்டு , நீங்க யார் கூட இருந்தாலும் கேள்வி இல்ல விஜய் அண்ணா!.. நம்பி ரெண்டு பிள்ளைகள் இருக்கு - அவங்களுக்கு இன்னைக்கு இது பயங்கரமா வலிக்கும்!.. இத யோசிக்க முடியலேன்னா , மக்களை பத்தி எப்படி யோசிப்பீங்க?.. சரி இல்ல!” என சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி விமர்சித்துள்ளார்.