8 வருடங்களாக காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நட்சத்திர தம்பதி சினேகன் மற்றும் கன்னிகா. இந்த ஜோடிகளின் சமூக வலைத்தள பதிவுகளை பார்ப்பதற்காகவே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குறிப்பாக கன்னிகா. அவர் இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் . சினேகன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சென்றதற்கு பிறகு அவர் தன்னை பிஸியாக வைத்துக்கொள்ளும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் காதலர் தினத்தன்று அவர் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் தனது ஆரம்ப கால வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.






அதில் “ ஒரு சினிமா ஆடிஷனுக்காக போனபொழுதுதான் சினேகனை சந்தித்தேன். அவருக்கு தங்கையா நடிக்க அழைத்திருந்தார்கள். அவரை யாரென்றே தெரியாது. அதன் பிறகு உதவியாளர் ஒரு சொல்லக்கேட்டுதான் அறிந்துகொண்டேன். அவருடைய பாடல்கள் அனைத்துமே எனது வாழ்க்கையில் எல்லா சூழலிலும் சுவாரஸ்யத்தை கொடுத்திருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் “கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா“ பாடல் ஒருமுறை எங்கள் வீட்டு விசேஷத்தில் ஒலித்த நிலையில் என் சித்தி “எந்த டேஷ் பையன் இதை எழுதினது “ என சாடியிருக்கிறார். அந்த சின்ன வயதில் எனக்கு அதெல்லாம் தவறாகப்பட்டது.


அதன் பிறகு அவருக்கு தங்கையாக நடித்தும் முடித்தேன். எங்கள் நட்பு அங்குதான் தொடர ஆரம்பித்தது. அவர் என்னிடம் காதலைச் சொன்ன பிறகு  சிறிது காலம் கழித்து கார்த்திகை தினத்தன்று மஞ்சள் , தாலி , குங்குமத்துடன் வந்து என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள் என சம்மதத்தை சொன்னேன்.






ஆரம்ப நாட்களில் நடிக்க வந்த சமயத்தில் Me too மாதிரியான விஷயங்கள் எனக்கும் இருந்தது. இப்போ சினிமா மாறிடுச்சு. இந்த சினிமா அப்போதே இருந்திருந்தால் , ஓரளவிற்கு அடையாளம் காணக்கூடிய நடிகைகள் வரிசையில் நானும் இருந்திருப்பேன். இந்த மாதிரி விவகாரங்களை கையாளுவது சற்று சிரமமான விஷயம்தான் . கவர்ச்சியாக இருந்தால் , அதுமாதிரியான காட்சிகளில் நடித்தால் மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கும் என்பதற்காக அதனை ஒப்புக்கொள்ளக்கூடாது.


ஏனென்றால் நான் நடிக்கும் படத்தை நாளை என் குடும்பம் பார்க்க வேண்டும் , கணவர் பார்க்க வேண்டும் , என் குழந்தை பார்க்க வேண்டும். இதைப்போன்ற வாய்ப்பு எனக்கு வந்து நான் தவிர்த்திருக்கிறேன். ஆனால் யாரும் கட்டாயப்படுத்துவதில்லை. பொருளாதாரம்தான் பெண்களுக்கு தைரியத்தை கொடுக்கும் என நான் நம்புகிறேன்“ என தெரிவித்துள்ளார் கன்னிகா.