குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் தான் கல்யாணி. அதன் பின்னர் பிரபு தேவா, முரளி நடித்த 'அள்ளித்தந்த வானம்' படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இந்த படத்தில் இவரது நடிப்பு அதிகம் பாராட்டப்பட்டது. இதை தொடர்ந்து ஸ்ரீ, குருவம்மா, ரமணா ஆகிய படங்களில் நடித்திருந்தார். ஜெயம் படத்தில் சதாவின் தங்கையாக நடித்திருந்தவரும் கல்யாணி தான். இப்படி குழந்தை நட்சத்திரமாக நடித்த கல்யாணி தனது 15ஆவது வயதிலேயே ஹீரோயினாக மாறினார். கத்தி கப்பல், , மறந்தேன் மெய்மறந்தேன் போன்ற சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். ஆனால் இந்த படங்கள் எதுவும் வெற்றிபெறாத நிலையில், அதிரடியாக சீரியல் பக்கம் தாவினார். இவர் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே சாருலதா, அண்ணாமலை, ரோஜா, சின்ன பாப்பா, பெரிய பாப்பா ஆகிய சீரியல்களில் நடித்திருந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் – சீசன் 1 மற்றும் , பிரிவோம் சந்திப்போம் – 2, தாயுமானவன் ஆகிய தொடர்களில் கதாநாயகியாக நடித்தார்.
சீரியலில் பிஸியான நடிகையாக வலம் வந்த கல்யாணி கடந்த 2014 ஆம் ஆண்டு ரோகித் என்பவரை திருமணம் செய்து கொண்டு முழுமையாக திரையுலகை விட்டு விலகினார். அதன் பிறகு அமெரிக்காவில் செட்டில் ஆனார். கல்யாணி மற்றும் ரோகித் தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
தன்னுடைய அம்மா மறைவுக்கு பின்னர் கணவருடன் சென்னையில் வசித்து வரும் கல்யாணி சினிமாவை விட்டு விலக என்ன காரணம் என்பது பற்றி பேசியிருகிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் 7 வயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறேன். ஆனால், 15 வயதில் தான் ஹீரோயினாக நடிக்க துவங்கினேன். நான் கதாநாயகியாக நடித்த படங்களுக்கு பெரியளவிற்கு ரீச் கிடைக்கவில்லை. அதன் பிறகு கொஞ்ச நாட்கள் நான் வீட்டிலேயே இருந்தேன்.
அப்போது தொகுப்பாளினி வாய்ப்பு என்னை தேடி வந்தது. அந்த நிகழ்ச்சியை சம்மந்தப்பட்ட ஒருவர் என்னை பாருக்கு அழைத்தார். நான் முடியாது என்று கூறவே அந்த சேனலில் எனக்கு வேறு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அந்த நேரங்களில் எனக்கு ஆறுதலாக பேச யாரும் இல்லை. இது ஒரு புறம் இருந்தாலும் நான் ஹீரோயினாக நடிக்க வந்த பட வாய்ப்புகளில் என்னை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொள்ளும்படி எனது அம்மாவிடமே கேட்டார்கள். ஆனால், அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அம்மாவிற்கு எதுவும் தெரியாது.
ஓ அது டேட் தானே சரிபார்த்துக் கொள்ளலாம் சார் என்றார். அது இல்லை மேடம் தயாரிப்பாளர், மேனேஜர் ஆகியோருடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டும் என்றார்கள். அப்போது தான் நான் ஒரு முடிவெடுத்தேன். இனிமேல் படங்களில் நடிக்க கூடாது. இதுவரையில் படங்களில் நடித்தது போதும் என்று முற்றிலுமாக அதிலிருந்து விலகிவிட்டேன். இதையடுத்து தான் எனக்கு விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வாய்ப்பு கிடைத்தது அடுத்தடுத்து சீரியல் வாய்ப்பும் கிடைத்தது என கூறியுள்ளார்.