பாலிவுட் முன்னணி நடிகையாக வலம் வந்த கஜோலில் 'The Trial' படத்தின் காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 50 வயதில் முத்தக் காட்சியில் கஜோல் நடித்துள்ளதை குறிப்பிட்டு பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள். 

Continues below advertisement



கஜோல்


90களில் இந்தி படங்களில்  நடித்து எல்லா மொழி ரசிகர்களாலும் பேசப் பட்டவர் நடிகை கஜோல். ஷாருக் கான் உடன் இவர் நடித்த படங்கள் அனைத்துமே இன்று வரை தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த படங்களாக இருந்து வருகிறது. இந்தியில் அதிக படங்களில் நடித்தாலும் கஜோல் அறிமுகமானது அரவிந்த்சாமி, பிரபுதேவா  இணைந்து நடித்த ‘மின்சார கனவு’ திரைப்படத்தில். இந்தப் படம் மூலமாக தமிழ்நாட்டில் ஏராளமானோர் கஜோலின் தீவிர ரசிகர்களாக உருவெடுத்தனர். பின்னர், வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்திலும் தனுஷூடன்  கஜோல் நடித்திருந்தார். பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் கஜோல். இவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் இரு குழந்தைகள் உள்ளன. திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் தொடர்ச்சியாக பெண் நடிகர்களுக்கு திரைப்படங்களில் சம உரிமை வழங்கப்படுவது குறித்தும் தொடர்ந்து பேசி வருபவர் கஜோல்.


50 வயதில் முத்த காட்சியில் கஜோல்


சோலோவாக பல படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார் கஜோல். கடந்த 2023 ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியான தி டிரையல் வெப் சீரிஸில் நடித்தார். இந்த தொடரில் கஜோலின் முத்த காட்சி  காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 50 வயதில் முத்த காட்சியில் கஜோல் நடித்துள்ளது ரசிகர்களிடையே பேசுபொருளாகி வருகிறது. பலர் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.