பாலிவுட்டில் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் கஜோல். 90்ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் ஹீரோயினாகவும் இன்றளவும் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாகவும் வலம் வருகிறார். தென்னிந்திய படங்களிலும் நடித்து கவனத்தை ஈர்த்துள்ளார். இந்நிலையில், ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பேய் இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு பலரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பேயா?
நடிகை கஜோல் சமீபத்தில் அளித்த பேட்டியில் ராமோஜி ஃபிலிம் சிட்டி பேய்கள் இருக்கும் இடம் என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆதாரமற்ற தகவலை பரப்பக்கூடாது என்றும் பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற வரலாற்று படங்களின் படப்பிடிப்பு நடந்த இடத்தை பார்க்க வெளிநாடு மற்றும் பிற மாநில மக்களும் வருகை தந்து செல்கின்றனர். அப்படி இருக்கையில் கஜோல் எப்படி அவ்வாறு கூறலாம் என விமர்சனம் எழுந்துள்ளது. இவ்வாறு பேசியது தவறு என்றும் சமூகவலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
படப்பிடிப்புக்கு உகந்த உடம்
ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தற்போது மகேஷ் பாபு நடிக்கும் படத்திற்காக இயக்குநர் ராஜமெளலி ரூ.50 கோடிக்கு செட் போட்டு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார். அதே போன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களின் படப்பிடிப்பு இங்கு நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி ஹீரோக்கள் படங்களையும் குறிப்பிடலாம். குறிப்பாக சிறுவர்களுக்கு பிடித்த இடமாக ராமோஜி ஃபிலிம் சிட்டி இருக்கிறது. பாகுபலி செட்டை பார்க்க அதிகளவில் மக்கள் வந்து செல்கிறார்கள். இந்த சூழலில் நடிகை கஜோல் கூறியிருப்பது சர்ச்சையாக மாறியிருக்கிறது.
கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நடிகை கஜோல் தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் எனது எம்ஏஏ படத்தின் புரோமோஷனுக்காக ராமோஜி ஃபிலிம் சிட்டி பற்றி கூறினேன். அந்த அர்தத்தில் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பல புராஜெக்ட்களில் நடித்திருக்கிறேன். இங்கு அதிகமுறை வந்து சென்றிருக்கிறேன். படப்பிடிப்பு நடத்துவதற்கான சிறந்த இடமாக ராமோஜி ஃபிலிம் சிட்டி இருக்கிறது. அதேபான்று சுற்றுலா பயணிகளும், சிறுவர்களும் வந்து செல்வதற்கு பாதுகாப்பான இடமாகவும் இருக்கிறது எனவும் கஜோல் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இப்படியா அந்தர்பல்டி அடிப்பது என கருத்து தெரிவித்துள்ளனர்.