Wayanad : ரூ.25 லட்சம் வழங்கிய ஃபகத் ஃபாசில்...மம்மூட்டி ரூ.20 லட்சம்.. வயநாட்டை அணைக்கும் பிரபலங்கள்..

வயநாடு நிலச்சரிவில் ஏற்பட்ட பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ் மற்றும் மலையாள திரையுலகம் கேரள அரசுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது.

Continues below advertisement

 கேரள அரசுக்கு ரூ.50 லட்சம் நிதி கொடுத்த சூர்யா 

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி துவங்கிய கனமழை காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு காரணமாக நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. 

Continues below advertisement

நிலச்சரிவின் மீட்பு பணிகள் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கிய உடல்கள் காண்போர் மட்டுமின்றி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த பெருந்துயரில் மீள முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர். 

இந்த நிலையில், பெருந்துயரில் பங்கேற்கும் வகையில் கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக, நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் ரூ. 50 இலட்சம் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்கள். மேலும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நடிகர் விக்ரம் 20 லட்சம் நிதியுதவி வழங்கியதைத் தொடர்ந்து தற்போது மலையாள நடிகர்கள் மம்மூட்டி 20 லட்சமும் அவரது மகன் துல்கர் சல்மான் 15 லட்சமும் வழங்கியுள்ளார்கள். நடிகர் ஃபகத் ஃபாசில் கேரள அரசுக்கு 25 லட்சம் நிதி வழங்கியுள்ளார். மேலும் பல்வேறு நடிகர்கள் இந்த பேரிடரில் இருந்து மீள நிதியுதவிகளை வழங்கி வருகிறார்கள்

Continues below advertisement