தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம், கார் ரேசர் என பன்முக தன்மைக்கொண்டவர் நடிகர் அஜித். இவர் சமீபத்தில் நடித்த 'குட் பேட் அக்லி' படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பின்னர், சில நாட்களுக்கு முன்பு, அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி அவர்களின் 25 வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடினர். இது தொடர்பான சில புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இந்த நேரத்தில், நடிகை ஹீரா ராஜகோபால் தனது முன்னாள் காதலன் மீது அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதே நேரத்தில் தனது காதல் கதை மற்றும் காதல் முறிவு குறித்தும் பகிர்ந்து கொண்டார். 1990 ஆம் ஆண்டு நடிகை ஹீரா ராஜ்கோபாலுடனான அஜித்தின் காதல் அப்போது பரவலாகப் பேசப்பட்டது. பல வாக்குவாதங்கள் காரணமாக அவர்கள் பிரிந்ததாக செய்திகள் வந்தன. இருப்பினும், இப்போது அவர் அஜித்தை ஒரு நடிகர் என்று அவரது பெயரைக் குறிப்பிடாமல் பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து ஹீரா ராஜகோபால் தனது வலைப்பதிவில் கூறியதாவது.. ”ஒரு நடிகர் என்னை ஏமாற்றியது மட்டுமல்லாமல், அவரது ரசிகர்களுடன் சேர்ந்து எனது ஆளுமையையும் சேதப்படுத்தினார். அவரால் நான் நிறைய அவமானங்களையும், பல சிரமங்களையும். சந்திக்க வேண்டியிருந்தது. அவர் ஒரு முறை தனது முதுகெலும்பில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறினார். அந்த நேரத்தில் நான் அவருடன் தங்கி அவருக்காக பல விஷயங்களைச் செய்தேன்.
ஆனால், அவர் தனது உடல்நிலை குறித்தும் பொய் சொன்னார் என்பதை நான் பின்னர் அறிந்தேன் என்றும் பின்னர், அந்த நடிகர் தன்னிடம் திருமணம் பற்றி என்ன சொன்னார் என்பதையும் குறிப்பிட்டு, "நான் வேலைக்காரி போல தோற்றமளிக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்" என்று கூறினார். பிறகு பாரும் அவளைப் பார்க்க மாட்டார்கள். "ஆனால் நான் விரும்பும் பெண்ணுடன் உடலுறவு கொள்வேன்" என்று நடிகர் ஹீராவிடம் கூறியதாக அவரது வலைப்பதிவில் பதிவிடப்பட்டுள்ளது.
பெயரே குறிப்பிடாமல் நடிகை ஹீரா சொல்லும் அந்த நடிகர் அஜித் குமாரா என்கிற கேள்வி சமூக வலைதளங்களில் கிளம்பியுள்ளது. மேலும் அஜித்துக்கு இன்று பத்மபூஷன் வழங்கப்பட்ட நிலையில் இந்த பதிவானது தற்போது வைரலாகி வருகிறது