பேச்சுலர் பட நடிகையான திவ்ய பாரதியின் பழைய டிக்டாக் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
கோவையைச் சேர்ந்த திவ்ய பாரதி சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் பதிவிடும் போட்டோக்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ்குமார் நடித்த பேச்சுலர் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான அவர் முதல் படத்திலேயே லிப் லாக் காட்சிகளில் நடித்து முன்னணி நடிகைகளுக்கே சவால் விடுத்தார்.
இப்படத்திற்கு பின் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர். மேலும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். பேச்சுலர் படத்தை தொடர்ந்து பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகென் ராவ் ஜோடியாக மதில் மேல் பூனை படத்தில் நடித்துள்ளார்.
இதனிடையே டிக்டாக் வீடியோவில், ஷாஜகான் படத்தில் இடம் பெற்ற சரக்கு வச்சிருக்கேன் பாடலுக்கு தனது முகபாவனைகளை அழகாக கொண்டு அவர் வெளியிட்டிருந்த வீடியோவை திவ்ய பாரதியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்