தமிழ் சினிமாவில், 90 காலகட்டங்களில், தொடர்ந்து குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து பிரபலமானவர் தேவயானி. இவர் நடிப்பில் வெளியான காதல் கோட்டை, பிரண்ட்ஸ், சூரியவம்சம், நினைத்தேன்வந்தாய், புதுமைபித்தன், போன்ற பல படங்கள் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் ரசிக்கப்பட்டு வரும் திரைப்படங்களாக உள்ளன .
தன்னை வைத்து, விண்ணுக்கும் மண்ணுக்கும், நீவருவாய்என, போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராஜகுமாரனை காதலித்துவந்ததேவயானி... பெற்றோர் சம்மதத்தை மீறி வீட்டைவிட்டுவெளியேறிஅவரையே திருமணம் செய்து கொண்டார். திருமணம்ஆனசிலவருடங்களுக்குபின்னரேதேவயானியிடம்அவரின்பெற்றோர்பேசதுவங்கினர். நடிகை தேவயானி - ராஜகுமாரன் தம்பதிகளுக்கு தற்போது இனியா மற்றும் பிரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருமே சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை தேர்வு செய்து படித்து வருகின்றனர் .
இந்த ஆண்டு இனியா படிப்பை முடித்த நிலையில், பாடல் மீது உள்ள ஆர்வத்தைவெளிப்படுத்துவதற்காக ஜீ தமிழில், ஒளிபரப்பாகி வரும் சரிகமப 'சீனியர் சீசன் 5' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கி வருகிறார். அறிமுக நிகழ்ச்சியிலேயே 'பாரதி' படத்தில் இடம் பெற்ற மயில் போல பொண்ணு ஒன்னு என்கிற பாடலை பாடி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதை மட்டும் இன்றி, நடுவர்களையும் ஆச்சரியப்படுத்தினார். மென்மையான குரல் வளம் கொண்ட இனியா தொடர்ந்து தன்னுடைய திறமையை பாடல் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.
தேவயானிநினைத்தால், தன்னுடையமகளுக்குநேரடியாகவேசிபாரிசுமூலம்வாய்ப்புவாய்ப்புகொடுத்திருக்கலாம். ஆனால்அப்படிசெய்யாமல்இதுபோல்ஒருசின்னத்திரைநிகழ்ச்சியில்கலந்துகொள்ளவைத்ததுகுறித்துகேட்டதற்கு, தன்னுடைய மகளாகஇருந்தாலும்அவருக்குதீமையால்மட்டுமேஅவருக்குவாய்ப்புகிடைக்கவேண்டும்என்பதற்காகமகளைஎந்தபோட்டியில்பங்குபெறவைத்ததாககூறினார். தேவயானியின்இந்தமுடிவுபலர்மத்தியிலும்பாராட்டுக்களைபெற்றுவருகிறது.
சரிகமப நிகழ்ச்சிமூலம்தன்னைஒருசிறந்தபாடகிஎனநிரூபித்துவரும் இனியா, சினிமாவிலும் ஹீரோயினாக மாறப் போகிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது . அதாவது தெலுங்கில் ராம் ஜெகதீஷ் இயக்கத்தில், பிரியதர்ஷினி புலிக்கொண்டா, சாய் குமார், நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரிலீஸ் ஆன திரைப்படம் 'கோர்ட்'. இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் தமிழ் உரிமையை இயக்குனர் தியாகராஜன் வாங்கியுள்ளதாகவும், இதில் தேவயானியின் மகள் இனியா ஹீரோயினாக அறிமுகமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அம்மாவைபோல்நடிப்பில்இனியாஜெயிப்பாரா? என்பதைபொறுத்திருந்துபார்ப்போம்.
