கடந்த அக்டோபர் மாதம் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டதாக வதந்தி பரவிய நிலையில், தற்போது இந்தத் தகவல் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.


டகோடா ஜான்ஸன்


பிரபல புத்தகமான ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே (fifty shades of grey)  நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை டகோடா ஜான்சன்.  இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘லவ் மி லைக் யூ டு’ பாடல் உள்ளூர் தெருக்களில் திருவிழாவில் ஒளிப்பரப்பாகும் அளவுக்கு ரீச் ஆகியது.


சர்ச்சைக்குரிய இந்தப் படத்தில் நடித்ததற்காக பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார் டகோடா ஜான்ஸன். அவரது நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான படம் மேடம் வெப்.  இப்படத்தில் அவருடன் சிட்னி ஸ்வீனி , எம்மா ராபர்ட்ஸ், உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்திருந்தார்கள். திரையரங்கில் வெளியாகிய இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.


பிரபல பாப் பாடகருடன் காதல்


இந்நிலையில், பிரபல பாப் இசைக்குழுவான கோல்ட்பிளே (coldplay) வின் பிரதான இசைக்கலைஞராக இருந்து வரும் கிறிஸ் மார்டினும் டகோடா ஜான்ஸனும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் இருவரும் திருமணம் நிச்சயம் செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகின. கடந்த  அக்டோபர் மாதம் டகோடா ஜான்ஸன் வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் அவரது கையில் இருந்த மோதிரத்தைப் பார்த்த ரசிகர்கள் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்கள். ஆனால் கிறிஸ் மற்றும் டகோடா ஆகிய இருவர் சார்பிலும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. தற்போது சமீபத்திய நேர்காணல் ஒன்றில் டகோடா தனது திருமண நிச்சயம் குறித்த தகவலை மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார். 






மேலும் தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி இருவரும் திருமண நிச்சயம் செய்துகொண்டதாகவும் ஆனால் திருமணத்தைப் பொறுத்தவரை அவர்கள் இன்னும் சில காலம் எடுத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


மேலும் இவர்கள் இருவருக்கும் கிறிஸ் மார்டினின் முன்னாள் மனைவி தனது வாழ்த்துக்களையும் பதிவு செய்துள்ளார். கிறிஸ் மார்டினின் இரண்டு குழந்தைகளை தற்போது டகோடா ஜான்ஸன் கவனித்து வருகிறார். இது தொடர்பாக பேசியபோது அவர் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகம் பேச விரும்பாத அவர் கிறிஸின் குழந்தைகளுக்கு தாயாவது தனது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.