நடிகை சர்மிலா பேட்டி
1980 மற்றும் 90களில் மலையாள திரையுலகில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஷர்மிலா. மோகன்லால். மம்மூட்டி போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டிருக்கிறார். ஆனால் மலையாள படங்களில் நடிக்க பயந்து பல வாய்ப்புகளை தான் நிராகரித்ததாக அண்மையில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மலையாள படங்கள் என்றாலே ஆபாச படங்கள் என்கிற எண்ணமே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்
குடியும் , பெண்களும் தான் மலையாள சினிமா
"பிரபல இயக்குநர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தபோதும் என் பெற்றோர்கள் என்னை நடிக்க அனுமதிக்கவில்லை. மலையாள சினிமாக்களைப் பற்றி அன்றிருந்த பொதுப்புத்தியே இதற்கு காரணம் . " கேரளாவுக்கு வெளியே மலையாள படங்கள் என்றாலே ஆபாச படங்கள் என்றுதான் பலரும் நினைத்து வைத்திருந்தார்கள். அந்த காலத்தில் பெண்களும் போதையும் தான் அவர்களின் பொழுதுபோக்கு. ஆனால் மறுபக்கம் மலையாளத்தில் மிக சிறந்த படங்கள் வந்திருக்கின்றன. மேலும் நாங்கள் ஹோட்டலில் தங்கும்போது கூட பி கிரேட் படங்களில் நடிப்பவர்களுக்கு என தனியாக தங்கும் விடுதிகள் இருந்தன. அவர்கள் எல்லாம் இப்போது இந்த துறையை விட்டே போய்விட்டார்கள். சிலர் திருமணத்திற்கு பின் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்கள். சிலர் துபாயில் போய் செட்டிலாகிவிட்டார்கள். "
மோகன்லால் கொடுத்த நம்பிக்கை
பிரபல தயாரிப்பாளரான கே பாலாஜியின் மருமகனான மோகன்லால் தான் மலையாளத்தில் நடிக்க ஷர்மிலாவை சம்மதிக்க வைத்துள்ளார். எல்லா மலையாள படங்களும் பி கிரேட் படங்கள் கிடையாது . மம்மூட்டி மோகன்லால் போன்ற பெரிய நடிகர்கள் நல்ல படங்களில் நடித்து வருவதாக மோகன்லால் ஷர்மிலாவின் பெற்றோர்களுக்கு நம்பிக்கை அளித்தார். மோகன்லாலின் படத்தில் நாயகியாக அறிமுகமானார் ஷர்மிலா. தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த ஷர்மிலாவுக்கு கேரள ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் ;தனம் ' கேளி , அங்கிள் பென் , பெரியபேட்ட குக்கு' ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றிபெற்றன.
கடந்த ஆண்டு ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியாகி பரவலாக பேசப்பட்ட போது மலையாள இயக்குநர் பி ஹரிஹரன் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்தார் ஷர்மிலா. 1994 ஆம் ஆண்டு தான் நடித்த 'பரிநயம்' படத்தின் போது தன்னை அட்ஜெஸ்மெண்ட் செய்துகொள்ள சொன்னதாக ஷர்மிலா கூறினார்.