பார்ட்டி மோடில் ஜூலி! முக அழகு ட்ரீட்மெண்டுக்கு பிறகான லேட்டஸ்ட் போட்டோ!

லேட்டஸ்டாக பார்ட்டியில் கலந்துகொண்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். நீல நிற உடையில் மாடர்னாக சென்றுள்ளார் ஜூலி

Continues below advertisement

மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் மிகவும் மக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. அதன் மூலம் அவருக்கு பிக் பாஸ் சீசன் 1ல் வாய்ப்பு கிடைத்தது. அவரின் பெயர் பிக் பாஸ் சீசனில் அதிகமாக டேமேஜ் அனாலும் மிகவும் பிரபலமாகவும் ஆனார். ஜூலிக்கும் நடிகை ஓவியாவிற்கும் இடையில் நடைபெற்ற சண்டைகள், வாக்குவாதங்கள், சர்ச்சைகள் மக்களை பெரிதும் கவர்ந்தது. 

Continues below advertisement

பிக் பாஸ் சீசன் 1ற்கு பிறகு பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் போட்டியாளராக பங்கேற்றார். அதனை தொடர்ந்து சினிமா மற்றும் மாடலிங் துறையில் தலைகாட்டி வந்தவர் திரைப்படங்களில் சில சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார் தற்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவர் இன்ஸ்டாவில் செம ஆக்டீவாக இருப்பார். இவர் லேட்டஸ்டாக பார்ட்டியில் கலந்துகொண்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். நீல நிற உடையில் மாடர்னாக சென்றுள்ளார் ஜூலி. குறிப்பாக தன்னுடைய வாம்பயர் ஃபேஷியல்க்கு பிறகான புகைப்படமாக இது இருக்கிறது

முன்னதாக, வாம்பயர் ஃபேஷியல் பற்றின அழகு சிகிச்சை முறை பற்றியும் அவரின் சருமத்தின் ரகசியம் குறித்தும் கூறுகையில்  வாம்பயர் ஃபேஷியல்தான் அதற்கு காரணம் என்று தனது அழகின் ரகசியத்தை பற்றி கூறியிருந்தார் ஜூலி.

வாம்பயர் ஃபேஷியல் என்பது கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம் சருமத்திற்கு புத்துயிர் தரும் முறையாகும். இந்த சிகிச்சையின் மூலம் முகத்தில் உள்ள வடுக்கள், முகப்பரு தழும்புகள், கோடுகள், பெரிய துளைகள் அவற்றை சரி செய்து சருமத்தின் பளபளப்பையும், நேர்த்தியையும் மேம்படுத்துகிறது.

Continues below advertisement