நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆதித்ய வர்மா திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி தந்தவர் நடிகை பனிடா சந்து (Banita Sandhu).
பாலிவுட் டூ கோலிவுட் பயணம்
பிரபல பாலிவுட் நடிகையான பனிடா சந்து இந்தியில் நடிகர் வருண் தவானுடன் அக்டோபர் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்த கவனமீர்க்கச் செய்தது. தொடர்ந்து தமிழில் பல சிக்கல்கள், பிரச்னைகளுக்கு இடையே வெளியான, நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமான ஆதித்ய வர்மா படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன் பின் இந்தி, தமிழ், தெலுங்கு என தொடர்ந்து நடித்து வரும் பனிடா சந்து சமூக வலைதளங்களில் படு ஆக்டிவ்வாக இருந்துவருகிறார். சினிமா தவிர்த்து தொலைகாட்சித் தொடர்கள், ஆல்பம் பாடல்கள் ஆகிவற்றிலும் தோன்றி வரும் பனிடா சந்து, பிரபல பஞ்சாபி பாடகர் ஏ பி தில்லியோனை காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
வித்தியாசமான ஃபோட்டோஷூட்
இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ‘வித் யூ’ ஆல்பம் பாடலில் இருவரும் இயற்கையாகவும் அழகாகவும் அமைந்த கெமிஸ்ட்ரி இவர்களின் காதல் உறவை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தாலும் இருவரும் இதனை உறுதி செய்யவில்லை.
இந்நிலையில் ரோஜாப்பூக்கள் பதித்த ஸ்கின் ட்ரெஸ் அணிந்து பனிடா சந்து வித்தியாசமான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ஆதித்யா வர்மா படத்தில் பனிடா சந்து தமிழ்நாட்டுப் பெண் போல் பாந்தமான உடையில் வலம் வந்த நிலையில் வித்தியாசமான உடையில் பனிடா ஆள் அடையாளமே மாறி பகிர்ந்துள்ள இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
மேலும் உடையில் நாள்தோறும் வித்தியாசம் காண்பித்து பாலிவுட்டை கலக்கி வரும் உர்ஃபி ஜாவேத்துக்கு போட்டியாக பனிடா சந்து களமிறங்கியுள்ளதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.