ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்தவர் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை என்ற படம் மூலமாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்திற்காக சிறந்த புதுமுக நடிகருக்கான தமிழ்நாடு அரசு விருது கார்த்திக்கிற்கு வழங்கப்பட்டது. அக்னி நட்சத்திரம், வருஷம் பதினாறு, கிழக்கு வாசல், பொன்னுமணி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பூவேலி என்று மாஸான படங்களில் நடித்தார்.


நடிகர் மட்டுமின்றி ஒரு பாடகராகவும் திகழ்ந்தார். வெத்தல போட்ட சோக்குல, கதை சொல்லபோறேன், கோழி கறி கொண்டு வரட்டா, ஹரிச்சந்திரன் வரான் என்று சில பாடல்களை பாடி ஹிட் கொடுத்திருக்கிறார். இந்தநிலையில் தான் நடிகர் கார்த்திக் பற்றி தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அறம் நாடு என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். அதைப் பற்றி பார்க்கலாம்.




இயக்குநர் பாசில் இயக்கத்தில் கார்த்திக், குஷ்பு, விகே ராமசாமி, சார்லி, ஜனகராஜ், பேபி ஷாலி ஆகியோர் பலர் நடிப்பில் 1989 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் வருஷம் 16. கிழக்கு வாசல் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற படம். இந்தப் படம் மட்டுமின்றி பாண்டியநாட்டு தங்கம் கார்த்திகை தலைமீது தூக்கி கொண்டாட செய்தது. இந்தப் படம் நீண்ட நாட்கள் ஓடிய படங்களின் பட்டியலில் இடம் பெற்றது.


சினிமாவுக்கு வந்த பிறகு எல்லோருக்கும் இருக்கும் பழக்கம் இவருக்கும் இருந்தது. தவறான பழக்கத்திற்கு அடிமையானார். ஒரு காலத்தில் சிறப்பான நடிகராக இருந்த கார்த்திக் இன்று இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். கார்த்திக் நாடாளும் மக்கள் கட்சி ஆரம்பித்த போது அவரது மாநாட்டிற்கு தொண்டர்களின் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து கார்த்திக் பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.


அரசியல் கட்சி மீட்டிங்கிற்கு செல்வார். தென் மாவட்டம் முழுவதும் டிராவல் செய்தார். இதற்காக அவருக்கு தங்க ரூம் போட்டு கொடுப்பார்கள். ஆனால், அவர் நைட் முழுவதும் மது அருந்திவிட்டு காலையில் எழுந்திருக்க முடியாமல் தவிப்பார். அரசியல் மீட்டிங்கிற்கும் அவரால் வர முடியாது. இதே போன்று தான் ஷீட்டிங்கிற்கும் உரிய நேரத்திற்கு வர மாட்டார். அவரது தவறான பழக்கத்தால் சினிமாவில் மார்க்கெட் இழக்கும் நிலை வந்தது. கார்த்திக்கை மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில் அழைத்து அவரையும், அவரது கட்சியையும் பாராட்டி பேசினார். 




இப்படி பல சிறப்புக்கள் கொண்ட இவர் சில நடிகைகளிடமும் சிலுமிஷத்திலும் ஈடுபட்டுள்ளார். இதனால் இவருக்கு திருமணம் ஆன தகவலை தாக்கி கொள்ள முடியாத ஒரு நடிகை தன்னுடைய உயிரையே மாய்த்து கொள்ள விஷம் அறிந்தி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்று தெரிவித்துள்ளார். அந்த நடிகை யார் என்பது இப்போது பல ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இப்படியெல்லாம் பல சிக்கல்களை சந்தித்தவர் நடிகர் கார்த்திக். இதற்கெல்லாம் காரணம் அவரது தவறான பழக்கம் தான். சினிமா முதல் அரசியல் வாழ்க்கை வரை எல்லாவற்றையும் இழந்தார் என்று கூறியிருக்கிறார்.