தனுஷ்
இந்திய சினிமாவின் தனித்துவமான நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். நடிகர் , பாடலாசிரியர் , தயாரிப்பாளர் , இயக்குநர் என பன்முகத்தன்மைக் கொண்டவர். ஆடுகளம் மற்றும் அசுரன் ஆகிய இரு படங்களுக்காக சிறந்த நடிகருக்கான இரு தேசிய விருதுகளையும் தயாரிப்பாளராக இரண்டு தேசிய விருதுகளையும் வென்றுள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் தனுஷ் இந்தியில் நடித்த ராஞ்சனா படமும் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. இந்தியாவுக்கு வெளியே ஹாலிவுட்டில் தி கிரே மேன் திரைப்படம் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்தார். பின் பக்கிரி என்கிற படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
தி கிரே மேன் படத்தில் தனுஷ் பற்றி அப்படத்தில் நாயகியாக நடித்த அனா டி ஆர்மாஸ் பேசியுள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
தனுஷுன் நானும் வாரகணக்கில் நேரம் செலவிட்டோ
தனுஷ் பற்றி கேட்ட போது அனா டி ஆர்மாஸ் இப்படி கூறியுள்ளார் " தனுஷ் ஒரு அற்புதமான மனிதர். நான் பார்த்ததிலேயே ரொம்ப பொறுமையான ஒரு மனிதர் என்றால் அது தனுஷ் தான் . கடுமையாக உழைக்கக் கூடியவர். நாங்கள் இருவரும் நிறைய நேரம் ஒன்றாக செலவிட்டிருக்கிறோம். தி கிரே மேன் படத்தின் ஸ்டண்ட் காட்சிகளுக்காக நாங்கள் நாங்கள் வார கணக்கில் நேரம் செலவிட்டோம். இருவரும் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டோம். எந்த வித புகாரும் சொல்லாமல் அவர் முழு மனதுடன் பயிற்சி செய்தார்" என கூறியுள்ளார்