கொட்டுக்காளி


விடுதலை , கருடன் படத்தைத் தொடர்ந்து சூரி நடிப்பில் அடுத்தபடியாக பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் படம் கொட்டுக்காளி. கூழாங்கல் படத்தின் மூலம் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற இயக்குநர் பி.எஸ் வினோத்ராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ்.கே ப்ரோடக்‌ஷன் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. மலையாள நடிகை அனா பென் இப்படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார். 


முன்னதாக கொட்டுக்காளி படம் பெர்லின் , ராட்டர்டாம் உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது ரோமானியா ரொமானியாவில் நடக்கும் டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் நடுவர்கள் வழங்கு சிறப்பு விருதினை வென்றுள்ளது. 


சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி






கொட்டுக்காளி படம் விருது வென்றதை படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துகொண்டு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். 


 நடிகை அனா பென் உருக்கம்


கொட்டுக்காளி படம் விருது வென்றதை குறித்து நடிகை அனா பென் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவில் அவர் “ஒரு நடிகராக இருப்பது என்பது நிலையற்ற ஒரு தொழில் . இதனால் நான் நிறைய சிரமங்களையும் எதிர்கொள்கிறேன். பல நாட்கள் ஒரு ஃபோன் கால் , ஒரு ஈமெயில் , என காத்திருந்திருக்கிறேன். ஒரு கட்டத்திற்கு மேல் உங்களை நீங்களே சந்திக்கத் தொடங்கும் தருணத்தில்தான் இந்த மாதிரியான அதியசங்கள் நடக்கின்றன.  இந்தப் படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று. இதற்காக படத்தின் இயக்குநர் வினோத்ராஜூக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அனா பென் தெரிவித்துள்ளார்.