தளபதி விஜய் நடிப்பில் திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் 'பூவே உனக்காக'. இந்த படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அஞ்சு அரவிந்த். இந்தப் படத்தைத் தொடர்ந்து, எனக்கொரு மகன் பிறப்பான், அருணாச்சலம், ஒன்ஸ் மோர், உதவிக்கு வரலாமா, ஆசை தம்பி, குரு பார்வை, உன்னருகே நானிருந்தால், வானத்தை போல வாஞ்சிநாதன், கண்ணா உன்னை தேடுகிறேன் போன்ற பல படங்களில் நடித்தார்.

இதே போன்று ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார். மேலும், ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். நடன கலைஞரான அஞ்சு அரவிந்த், சமீப காலமாக திரைப்படங்களை விட நடனத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள இவர், அதில், தன்னுடைய திருமணம், விவாகரத்து, மற்றும் காதல் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், என் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. 2ஆவது திருமணம் கணவரின் மரணத்தால்  சோகம் தான் மிஞ்சியது. ஆனால், இதையெல்லாம் ஓரமாக வைத்துவிட்டு தனது சினிமா மற்றும் நடனம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, தனிப்பட்ட வளர்ச்சியை தொடர்ந்து வருகிறேன் என கூறியுள்ளார். 

இதற்கிடையில் கடந்த 5 ஆண்டுகளாக தனது பள்ளி காதலரான சஞ்சய் அம்பலபரம்பத்துடன் லிவ் இன் உறவில் இருப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவர் 8ஆம் வகுப்பில் நான் படித்த போது நான் காதலித்த முதல் நபர். பள்ளி பருவத்திற்கு பிறகு மீண்டும் இளமை பருவத்தில் டான்ஸ் பள்ளியில் முதன் முதலில் சந்தித்தோம். பல ஆண்டுகளாக இருவரும் பிரிந்திருந்த நிலையில், இப்போது மீண்டும் இணைத்துள்ளோம்.

 டான்ஸ் பின்னணி கொண்ட சஞ்சய், எழுத்து மற்றும் சமூகப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தனது ஐடி பணியை விட்டுவிட்டார். அதோடு தன்னுடைய தனிப்பட்ட, தொழில் வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறிவிட்டார் என அஞ்சு கூறி உள்ளார். அஞ்சு பெங்களுருவில் செட்டிலாக காரணமாக இருந்தவர் சஞ்சய் தான். மேலும், இருவரும் இணைந்து அஞ்சு அரவிந்த் என்ற டான்ஸ் அகாடமியை நிறுவி நடத்தி வருகிறார்கள் . 

அஞ்சு அரவிந்த் கடைசியாக அவகாசிகள் என்ற மலையாள படத்தில் நடித்தார். இந்தப் படம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது. தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த துவங்கியுள்ள நிலையில் தமிழிலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.