ஆயிரத்தில் ஒருவன் 2 படம் பற்றி நடிகை ஆண்ட்ரியாவிடம் எழுப்பிய கேள்விக்கு அவர் மழுப்பலான பதிலளித்துள்ளார். இதனால் அவர் அந்த படத்தில் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆயிரத்தில் ஒருவன் படம்
கடந்த 2010ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, பார்த்திபன், ரீமாசென், பிரதாப் போத்தன், கிரேன் மனோகர் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் “ஆயிரத்தில் ஒருவன்”. ஜி.வி.பிரகாஷ் குமார் இயக்கிய இந்த படம் சோழர் - பாண்டியர் கால கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படம் அந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான நிலையில் பிரமிக்க வைக்கும் அளவுக்கு உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை ரசிகர்களிடத்தில் பெறவில்லை.
ஆனால் காலங்கள் சென்ற நிலையில் தற்போது ஆயிரத்தில் ஒருவன் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய கொண்டாட்டமாக மாறியுள்ளது. கல்ட் கிளாஸிக் படங்களின் வரிசையில் இடம்பெற்றுள்ள அப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட காலக்கட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடியது.
உருவாகும் 2ம் பாகம்
இதனிடையே பலரும் அப்படத்தின் 2ம் பாகத்தை எடுக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அப்படியான ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் போஸ்டரும் வெளியானது. ஆனால் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இந்த முறை நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் கதையை செல்வராகவன் எழுதி வந்த நிலையில் எப்போது உருவாகும் என எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியாவிடம் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் வருமா,3ம் பாகம் வருமா என கேட்கிறார்களே? என கேட்கப்பட்டது. அதற்கு, “நான் வரலப்பா” என பதிலளித்தார். அந்த மாதிரி படமெல்லாம் வாழ்க்கையில் ஒருமுறை தான் பண்ண வேண்டும்” என கூறினார். அதேபோல் அந்த படத்தில் உங்களுடைய பேவரைட் பாடல் என்ன? என கேட்கப்படது.
உடனே எனக்கு மாலை நேரம் பாடல் ரொம்ப பிடிக்கும். அது படத்துக்கு தேவையில்லாத பாடல். படத்திலும் இடம் பெறவில்லை. ஜி.வி.பிரகாஷ் தான் உங்களுடன் எனக்கு இது முதல் ஆல்பம். ஒரு ரொமான்டிக் பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தார். அந்த பாடல் பதிவு நடக்கும்போது எனக்கு பயங்கரமாக ஜலதோஷம் பிடித்திருந்தது. அதனால் என்னவோ அந்த பாடலின் என்னுடைய குரல் வித்தியாசமாக தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்” என ஆண்ட்ரியா கூறியுள்ளார்.
ஆண்ட்ரியா தான் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் முதல் பாகத்தில் கதையை நகர்த்தி செல்லும் கேரக்டரில் நடித்திருந்தார். அவர் இல்லாமல் 2ம் பாகம் யோசித்து பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.