பாத் டப்பில் ஜாலியாக குளித்துக்கொண்டிருக்கும் நடிகை ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஆண்ட்ரியா. அதற்கு முன்பாக அந்நியன் படத்தில் "கண்ணும் கண்ணும் நோக்கியா" பாடல் மூலம் பிரபலமானார். துப்பாக்கியில் ‘கூகிள் கூகிள்’ மற்றும் அஞ்சானின் ‘ஏக் டோ தீன்’ போன்ற பாடல்கள் இவர் குரலில் பெரிய ஹிட் ஆனது. திரைப்படங்களில், நடிக்கவும், பாடவும் தொடர்ந்து செய்து வந்தார். தரமணி பட ப்ரோமோஷன் ஒரு பகுதியாக அவரே இசை அமைத்து, எழுதி "Soul of tharamani " என்னும் பாடலை பாடினார். ஆண்ட்ரியாவின் குரல் மிகவும் தனித்துவமானது. அவ்வளவு ஏன்... தற்போது வெளியான புஷ்பா படத்தில் செம்ம ஹிட் அடித்த ஓ சொல்றியா மாமா பாடல் ஆண்ட்ரியா பாடியதுதான்...
கதையில் பெண்கள் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள் என்பதை நன்கு அறிந்தபின்பே, ஆண்ட்ரியா தனது கதாபாத்திரங்களை தேர்வு செய்வார். திரைப்பட தயாரிப்பாளர்கள் பெண்களுக்கு அதிக கணிசமான பாத்திரத்தை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஆயிரத்தில் ஒருவர், வட சென்னை உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பு திறைமையை வெளியாகாட்டிய ஆண்டிரியா, தற்போது பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில், ஆண்ட்ரியாவின் நடிப்பை பலரும் எதிர்ப்பார்த்துள்ளனர்.
சினிமாவில் பிஸியாக நடிக்கவும், பாடவும் செய்து வரும் ஆண்ட்ரியா, சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவும் இருப்பார். தான் எங்கெல்லாம் சுற்றுலா சென்றாலும், அங்கு பிடிக்கப்பட்ட, தனது புகைப்படங்களை தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிடுவார். அத்துடன், சில நேரங்களில் விதவிதமான உடையணிந்து போட்டோஷூட் நடத்தி அதனையும் வெளியிடுவார். தற்போது, பாத்டப்பில் குளிக்கும் அழகான புகைப்படங்களை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், நுரையுடன் ஆண்ட்ரியா தனது அழகான புன்னகையுடன் விளையாடுகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்