மதராசப்பட்டினம் படத்தில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிய நடிகை எமி ஜாக்ஸன் இன்று தனது 32ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.


எமி ஜாக்ஸன்




மதராசப்பட்டினம் படம் வெளியான சமயத்தில் ஒரு எஸ்.எம்.எஸ் காமெடி அதிகம் புகழ்பெற்றது. அந்தக் காமெடி இதுதான் “ஒருவேளை இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும்?”


”தெரியலையே” 


மதராசப்பட்டினம் படத்துல வரது மாதிரி எல்லாருக்கும் எமி ஜாக்ஸன் மாதிரி ஒரு காதலி கிடைச்சிருக்கும்”


தமிழ் பேசத் தெரியாமல் எந்தவித அடையாளமும் இல்லாமல் ஏ.எல் விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படத்தில் நடித்தார் எமி.ஜாக்ஸ்ன. பாலிவுட்டில் கத்ரீனா கைஃப் லண்டனை பூர்விகமாகக் கொண்டதைப் போல் எமி ஜாக்ஸனும் லண்டனை பூர்வீகமாகக் கொண்டவர்.


ஒரு ஃபாரின் நடிகையை ரசிகர்கள் பெரும்பாலும் ஒரு படத்திற்கு மேல் அதிகமாக பார்க்க விரும்ப மாட்டார்கள். அதிலும் குறிப்பாக மதராசப்பட்டினம் படத்தில் அவரது கதாபாத்திரமும் ஒரு ஆங்கிலேயப் பெண் என்பதால் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வராது என்றே அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் கோலிவுட்டில் அதிக வரவேற்கப்பட்ட நடிகைகளில் ஒருவராக மாறிப்போனார் எமி ஜாக்ஸன்.




தனுஷூடன் தங்கமகன், விஜய்யுடன் தெறி, ரஜினிகாந்துடன் 2.0 , விக்ரமுடன் ஐ என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் அடுத்தடுத்து நடித்தார். தமிழில் மட்டுமில்லாமல் இந்தியில் சில படங்களிலும் தெலுங்கில் சில படங்களிலும் நடித்தார். இதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் குறையத் தொடங்க தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த தொடங்கினார். 


கடந்த 2019ஆம் ஆண்டு தான் காதலித்து வந்த ஜார்ஜ் என்பவருடன் நிச்சயம் செய்துகொண்டார். இருவரும் திருமணம் செய்துகொள்ள இருந்த சமயத்தில் இந்த ஜோடிக்கு அதே ஆண்டின் இருதியில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக எமி மற்றும் ஜார்ஜ் தங்களது உறவை முடித்துக்கொண்டார்கள்.


இருவரின் பிரிவு தொடர்பான எந்தவித தெளிவான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. சில காலம் கழித்து எமி ஜாக்சன் புகழ்பெற்ற ஹாலிவுட் தொலைக்காட்சி நடிகரான எட் வெஸ்ட் விக் என்பவரை காதலிப்பதாக தகவல் வெளியானது. எமி ஜாக்சன் மீது பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைக்கப்பட்டன. ஆனால் எந்தக் காரணத்திற்காகவும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை மறைத்துவைக்கவில்லை எமி ஜாக்சன்.


புத்துணர்ச்சியாக தொடங்கிய 2024






இந்த ஆண்டு எமி ஜாக்ஸனுக்கு சற்று உற்சாகமான ஆண்டாக தொடங்கியிருக்கிறது. முதலில் ஏ.எல்.விஜய் இயக்கிய அருண் விஜய் நடித்த மிஷன் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தனது காதலனை திருமணம் செய்துகொள்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் எமி ஜாக்ஸன். பனிப் பிரதேசத்தில் உயரமான பாலத்தின் மீது நின்று கொண்டு எமி ஜாக்சனிற்கு மோதிரம் அணிவித்து நடிகர் எட் வெஸ்ட்விக்குடன் நிச்சயம் செய்துள்ளார்.  எமி ஜாக்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளுடன் சிறப்பான திருமண வாழ்வும் அமைய வாழ்த்துகள்.