பாலிவுட்டில் பிரபல நடிகை அலியா பட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நேரமிது. முன்னதாக நடிகர் அமீர்கான் , மாதவன், கார்த்திக் ஆர்யான் மேலும் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது . அனைவரும் தனிப்படுத்தபட்டதை தங்களின் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தனர் .
இந்நிலையில் நடிகை அலியா பட்டுக்கு வியாழன் அன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது . இவர் மும்பையில், சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் கத்தியாவாடி என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். அலியா, தனது இன்ஸ்டாகிராமில் நள்ளிரவில் வெளியிட்ட செய்தியில், "அனைவருக்கும் வணக்கம். எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவேன். என்னுடைய மருத்துவர்கள் அறிவுரையின்படி அனைத்துப் பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன் "என தெரிவித்துள்ளார்.