தனக்கென தனி பாணியில் நடித்து ரசிகர்களை கவர்ந்துழுக்கும் நடிகர்கள் ஏராளாம். அவர்களுள் ஒருவர்தான் சவுண்டு சரோஜா என்ற புகழைப்பெற்ற நடிகை ஐஸ்வர்யா. 80 களில் முன்னணி நடிகையாக ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த லக்‌ஷ்மியின் மகள்தான் ஐஸ்வர்யா என்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா 1990 ஆம் ஆண்டு வெளியான  நியாயங்கள் ஜெயிக்கும் திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமானார்.


முன்னதாக தெலுங்கு திரைப்படம்தான் இவருக்கு முதல் திரைப்படம். ஹீரோயின் , வில்லி , குணச்சித்திர நடிகை என தமிழ் , தெலுங்கு, மலையாள  மொழி திரைப்படங்களில் அசத்திய ஐஸ்வர்யாவிற்கு ,  ரஜினி நடிப்பில் வெளியான எஜமான் திரைப்படம் நல்ல அங்கீகாரத்தை கொடுத்தது. எஜமான 1993 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். படத்தில் குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் நடித்த மீனா , ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதே போலத்தான் சிறு வயதில் இருந்தே அங்கிள் ..அங்கிள்..என கூப்பிட்டு வளர்ந்த நடிகை ஐஸ்வர்யா , ரஜினிக்கு மற்றொரு ஜோடியாக நடித்திருந்தார். எஜமான் படத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இந்நிலையில்  படத்தில் ரஜினியுடன் தான் நடித்த அனுபவங்களை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா.




அதில் " ரஜினி அங்கிளை சாட்டையால அடிக்குற சீன். ஷார்ட்டுக்கு சவுக்கு எடுத்துட்டு நிற்கும் பொழுதே எனக்கு கை நடுங்குது.  ரஜினி அங்கிளுக்கு குசும்பு ஜாஸ்தி. வேண்டுமென்றே என்னை பார்த்து “ பராவியில்லை சாந்தி நல்லா அடி , நிறைய காசு வாங்கியிருக்கேன் “ என்றார். என்னுடைய ஒரிஜினல் பெயர் சாந்தி. அதை சொல்லித்தான் அவர் கூப்பிடுவார்.  அப்போ நான் “ அங்கிள் ..எனக்கு ஏற்கனவே பயமா இருக்கு “ என்றேன். அது என் வாழ்க்கையில மறக்க முடியாத சம்பவம். அடுத்ததாக இந்த உரக்க கத்துது கோழி  பாடல் பொள்ளாச்சியில டிசம்பர் மாதம் எடுத்துக்கொண்டிருந்தோம்.  தண்ணீரை மேலே ஊற்றி ஊற்றி எனக்கு ஜன்னி வந்துடுச்சு . அதன் பிறகு நான் மரப்பெட்டியெல்லாம் போட்டு வைத்திருந்த சின்ன ரூமில் போய் கதகதப்பிற்காக படுத்துக்கொண்டேன். என்னை எல்லோரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள் . ரஜினி அங்கிள் மட்டும் எனது காலை பார்த்துவிட்டு, சாந்தி எழுந்துருமா..எழுந்துருமானு கைய தொட்டதும் , அய்யய்யோ குழந்தைக்கு ஃபீவர் இவ்வளவு இருக்கேன்னு , அவரே தன்னோட கைகளால தூக்கிட்டு போயிட்டு , வண்டியில போட்டு பொள்ளாச்சியில இருந்து கோவை மருத்துவமனையில என்னை சேர்த்தார்.  நான் அவரை பார்த்த பொழுது “ கண்ணா..சாந்தி.....ஒன்னில்ல கண்ணா.. எல்லாம் சரியாயிடும்..எல்லாம் சரியாயிடும்னு சொன்னாரு. ஒரு சூப்பர் ஸ்டார் அதை செய்யனும்னு அவசியம் இல்லை .. எனக்கு அது சிறப்பான நினைவுகள் . ஒரு சூப்பர் ஸ்டார் எந்தவித பந்தாவும் இல்லாமல் அதை செய்தார் “ என பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா.