டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பல சமூகவலைதளங்களில் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதாக புகார் தெரிவித்திருந்தார். பல்வேறு நிறுவனங்கள் அவர்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்காக விளம்பரத்தில் தனது புகைப்படங்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அது மட்டும் இல்லாமல் ஏஐ மூலம் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தனது அங்கங்களை மிகவும் மோசமாக சித்தரித்து காட்டுவது போன்ற புகைப்படங்களை பார்க்க முடிகிறது. 

Continues below advertisement

ஐஸ்வர்யா ராய் தொடர்ந்த வழக்கு

அதனை சிலர் தங்களது சுயலாபத்திற்காக எனது மார்பிங் செய்யப்பட்ட தனது புகைப்படங்களை பயன்படுத்தி வருகிறார்கள். எனவே, எனது தனிப்பட்ட உரிமைகள் பாதுகாக்கவும், அனுமதியின்றி எனது புகைப்படங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என ஐஸ்வர்யா ராய் கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தேஜாஸ் கரியா, தனிப்பட்ட உரிமைகளை பாதுகாக்கும் வகையில், ஐஸ்வர்யா ராய் அனுமதியின்றி அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் பல நோக்கங்களுக்காக நடிகரின் படங்களை அங்கீகரிக்கப்படாமல் பயன்படுத்தும் வலைத்தளங்களுக்கு எதிராக தடை உத்தரவுகளை பிறப்பிப்பதாக நீதபிதி உறுதியளித்தார். பின்னர், இந்த வழக்கின் விசாரணையை அடுத்தாண்டு ஜனவரி 15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார். 

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

நடிகை ஐஸ்வர்யா ராய் மாடலிங் உலகில் சிறந்து விளங்கினார். உலக அழகி பட்டம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். அதைத்தொடர்ந்து தமிழில் இருவர், ஜீன்ஸ், ராவணா, பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஆராத்யா என்ற மகளும் உள்ளார். பிடித்த படங்களில் மட்டும் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் குடும்பம், மகள் என மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அபிஷேக் பச்சனும் - ஐஸ்வர்யா ராயும் அமைதியான சூழலில் இருந்தாலும் இவர்களை பற்றிய செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்துவதும் உண்டு. அவ்வப்போது புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி  வைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement