சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை சமந்தா, அங்கு பனிச்சறுக்கு விளையாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பனிச்சறுக்கு விளையாடும் சமந்தாவின் புகைப்படம் நேற்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இன்று பனிச்சறுக்கில் கெத்தாக விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 'வீட்டில் உங்கள் ஈகோவை விடுங்கள். உண்மையான வார்த்தைகள் எதுவும் பேசப்படவில்லை’ எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, பனிச்சறுக்கு டிரஸ்ஸில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். உலகின் முதன்மையான ஸ்கை ரிசார்ட்களில் ஒன்றான வெர்பியரில் இருந்து ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்ட சமந்தா, கேமராவிற்கு மகிழ்ச்சியுடன் போஸ் கொடுத்தார். அவர் மஞ்சள் ஜெர்க்கிங், வெள்ளை ஹெல்மெட் மற்றும் வெள்ளை பாட்டம்ஸ் அணிந்திருந்தார். அத்துடன் அவர் தனது பனிச்சறுக்கு அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். இந்த படம் இன்ஸ்டாகிராமில் தற்போது வரை 1.3 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் துபாய் மற்றும் ரிஷிகேஷுக்கு விடுமுறை சென்றுவிட்டு, கோவாவில் புத்தாண்டைக் கொண்டாடிய சமந்தா, தற்போது பனிச்சறுக்கு கற்க சுவிட்சர்லாந்து சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடிகை சமந்தா ‘ஓ சொல்றீயா’ பாடலில் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து கவர்ச்சியாக நடனம் ஆடினார். இந்தப் பாடல் இந்தியளவில் மிகவும் பிரபலமடைந்தது. இந்தப் பாடலுக்கு சமந்தா 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவிடமிருந்து பிரிந்ததிலிருந்து, சமந்தா தனது மனதையும் ஆன்மாவையும் அமைதிப்படுத்த இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்