தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் விஜய் ஆண்டனி. பிரபல இசையமைப்பாளரான இவர் நடிகராக உருவெடுத்த பிறகு தேர்வு செய்து நடிக்கும் படங்கள் மூலமாக மக்கள் மத்தியில் இவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. 

சக்தி திருமகன் ட்ரெயிலர்:

இந்த சூழலில், இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சக்தி திருமகன். முதலில் பராசக்தி என்று பெயர் வைத்திருந்த நிலையில், பின்னர் இந்த படத்திற்கு சக்தி திருமகன் என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த நிலையில், இந்த படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகியுள்ளது. 

விஜய் ஆண்டனி நடிக்கும் இந்த 25வது படத்தில் அவருடன் சுனில் கிரிபலானி, செல்முருகன், வாகை சந்திரசேகர், திரிபாதி ரவீந்திரா, கிரண் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெயிலர் படம் அரசியல் களத்தை மையமாக உருவாகியிருப்பதை குறிப்பிடுகிறது. இது விறுவிறுப்பான திரைக்கதை கொண்டிருக்கும் என்று படத்தின் ட்ரெயிலர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. 

கதைக்களம்:

அரசியல்வாதியாக விஜய் ஆண்டனி இந்த படத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை அருண் பிரபு இயக்கியுள்ளார். படத்திற்கு ரேமண்ட் டெரிக் மற்றும் தின்சா எடிட்டிங் செய்துள்ளனர். ஷெல்லி ஆர் காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் ஆண்டனியே இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். 

விஜய் ஆண்டனி வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடித்து வருபவர் என்பதால் இந்த படமும் ரசிகர்களை கவரும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வரும் 19ம் தேதி உலகெங்கும் ரிலீசாகிறது. 

தெலுங்கிலும் ரிலீஸ்:

இந்த படத்தின் ட்ரெயிலருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. இதனால், படத்தில் தமிழ்நாட்டின் அரசியல் களம் எதிரொலிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், இந்த படம் தெலுங்கிலும் வெளியாக உள்ளது.