தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான இயக்குனராக உலா வருபவர் கார்த்திக் சுப்பராஜ். பீட்சா படம் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிய அவர் ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா பார்ட் 2 போன்ற பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். 

Continues below advertisement

பீட்சா:

இந்த நிலையில், இவர் பிரபல இயக்குனரும், நடிகருமான சித்ரா லட்சுமணனுடான நேர்காணலின்போது பீட்சா படம் பற்றி மனம் திறந்து பேசினார். அந்த நேர்காணலில் பீட்சா படத்தின் கதையை எந்தெந்த நடிகரிடம் எல்லாம் கூறினார்? என்று விளக்கமாக தெரிவித்தார்.

நிராகரித்தவர்கள் யார்? யார்?

அவர் அளித்த பேட்டியில், நடிகர் பிரசன்னா, நடிகர் வைபவ் ஆகியோரிடம் பீட்சா கதையை முதன்முதலில் கூறியதாகவும், ஆனால் அவர்களால் அதில் நடிக்க இயலவில்லை என்று கூறியுள்ளார். பின்னர், தயாரிப்பாளர் சிவி குமார் இந்த கதைக்கு யாரை மனதில் வைத்துள்ளீர்கள்? என்று கேட்டபோது விஜய் சேதுபதியையே கேட்கலாமா? என்று கேட்டார். அவர் அப்போது எனக்குத் தெரிந்து தென்மேற்கு பருவமழை காற்று வந்துவிட்டது. ஓகே அவரை கேட்கலாம் என்று கூறினார். அதன்பின்பு, விஜய் சேதுபதியை கேட்டேன் என்றார்.

Continues below advertisement

மிகப்பெரிய திருப்புமுனை:

பீட்சா படம் விஜய் சேதுபதி மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகிய இருவரின் திரை வாழ்விலும் மிகப்பெரிய திருப்புமுனையை உண்டாக்கியது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், நரேன், கருணாகரன், பாபி சிம்ஹா, பூஜா ஆகியோர் நடித்திருப்பார்கள். இவர்கள் அனைவரும் அப்போது வளர்ந்து வந்த காலகட்டம் ஆகும். தற்போது இவர்கள் மிகப்பெரிய நடிகர்களாக உள்ளனர்.

2012ம் ஆண்டு வெளியான இந்த படம் ரூபாய் 1.5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, ரூபாய் 8 கோடி வசூலை வாரிக்குவித்தது.  இந்த படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்தார். லியோ ஜான்பால் படத்தொகுப்பு செய்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருப்பார். திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்தனர். இந்த படம் பல்வேறு திரைப்பட விருதுகளை குவித்துள்ளது. பீட்சா படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம் ஆகும். குறைந்த பட்ஜெட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் அதில் நடித்தவர்களுக்கும் சிவப்பு கம்பளத்தை கோலிவுட்டில் விரித்து கொடுத்தது.

பீட்சா படத்திற்கு பிறகு இவர் ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி, பேட்ட, ஜகமே தந்திரம், மகான், ஜிகர்தண்டா டபுள், ரெட்ரோ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.