யோகி பாபு 


யோகி பாபு இல்லாத படம் என்றாலே இப்போதெல்லாம் ஆச்சரியம் தான். இரண்டு நாட்கள் கால்ஷீட் இருந்தால் கூட ஒரு சில நிமிடங்கள் நடித்தால் போதும் என்கிற நிலைக்கு இயக்குநர்கள் காத்திருக்கிறார்கள். சினிமா இல்லாமல் எதார்த்த வாழ்க்கையிலும் நகைச்சுவையை வெளிப்படுத்தக் கூடியவர். அவ்வப்போது ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார்.


தம்பியின் காதலுக்கு பச்சைக் கொடி


நடிகர் யோகி பாபுபின் தம்பி விஜயனின் திருமணம் கடந்த ஜூன் 3-ஆம் தேதி திடீரென நடந்தது. முன்னறிவிப்பு இல்லாமல் நடந்த இந்த திருமணத்தின் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.


இயக்குநர் ஆகவேண்டும் என்கிற கனவில் இருப்பவர் விஜயன். தனது சகோதரனுக்காக யோகி பாபு தனது நெருங்கிய சினிமா வட்டாரங்களில் கூட பேசி வருவதாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் விஜயனுக்கும் பேஸ்புக் வழியாக மைசூரைச்  பெண் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இவர் படுகா சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இருவரின் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.


இந்த பிரச்சனையை சரிசெய்ய யோகி பாபுவே பெண் வீட்டாரை நேரில் சந்தித்து இந்த திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார்.


இருவீட்டாரின் முன்னிலையில் கடந்த ஜூன் மாதம் இந்த திருமணம் யோகிபாபுவின் சொந்த ஊரான செய்யாறில் நடைபெற்றுள்ளது.