இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்ஸிக் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Continues below advertisement

ரிலீஸ் தேதி மாற இதான் காரணம்

Toxic: A Fairy Tale படம் உலகளாவிய பார்வையாளர்களுக்கான சினிமாவை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் நாங்கள் உருவாக்கிய ஒரு திரைப்படம்.

கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்ட இது, வீட்டிலும் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுடன் இணையும் நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. பல வருட அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பிறகு, மார்ச் 19 ஆம் தேதி எங்கள் படத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் தற்போது மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய நிச்சயமற்ற தன்மை, பரந்த பார்வையாளர்களைச் சென்றடைந்து இணைக்க வேண்டும் என்ற எங்கள் இலக்கை பாதிக்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

Continues below advertisement

எனவே, எங்கள் பார்ட்னர்கள் மற்றும் பார்வையாளர்களின் நலனுக்காக, எங்கள் வெளியீட்டை மறு திட்டமிட கடினமான அதேசமயம் கவனமாக பரிசீலிக்கப்பட்ட முடிவை எடுத்துள்ளோம். எங்கள் நிலைமை தொடர்பான உங்கள் புரிதலுக்கும் பொறுமைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் உங்கள் தொடர்ச்சியான அன்பையும் ஆதரவையும் எதிர்நோக்குகிறோம்.

Toxic படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் ஜூன் 4, 2026 அன்று வெளியிடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்ஸிக் படம் - ஓர் பார்வை

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் 2 ஆகிய படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படம் மூலம் இந்திய சினிமாவில் யஷ் பிரபலமாக மாறினார். தொடர்ந்து அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இப்படியான நிலையில் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யஷ் தற்போது டாக்ஸிக் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹூமா குரேஷி உள்ளிட்ட பல ஹீரோயின்கள் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் டிராமா பாணியில் உருவான டாக்ஸிக் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேசமயம் கடும் சர்ச்சைகளை சந்தித்தது. 

இந்த படம் ரிலீஸ் தேதி தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் ட்ரெய்லர் வெளியாவதும் தள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 5 மாநில சட்டமன்ற தேர்தல் காரணமாக பல படங்கள் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்ட நிலையில் உலக நாடுகள் சண்டை காரணமாக டாக்ஸிக் படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.