கடந்த பிப்ரவரி மாதம் வெளியான வலிமை படத்திற்கு பிறகு போனிகபூர் இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் 3வது முறையாக நடிகர் அஜித் நடித்துள்ள படம் “துணிவு”. வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள, இப்படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தின் திரையரங்க விநியோக உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிரடி ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அஜித் வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், துணிவு படத்தில் 70 சதவீத சண்டைக் காட்சிகளில் அஜித்தின் டூப்பே நடித்துள்ளதாக தகவல் வெளியானது. சுதாகர் என்ற டூப் ஆர்டிஸ்ட் அஜித்திற்கு டூப்பாக நடித்துள்ள நிலையில், அது தொடர்பான புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து இருந்தார்.
இந்த செய்தி சமூகவலைதளங்களில் வேகமாக பரவ, துணிவு படத்தில் அஜித்தான் 100 சதவீதம் நடித்திருக்கிறார் என்று படக்குழுவும் தயாரிப்பு நிறுவனமும் கூறியுள்ளது.